Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஷாங் மனோகர் ஐசிசி சேர்மன் ஆன கையோடு... ராகுல் டிராவிடுக்கும் புதுப் பதவி!

துபாய்: இந்தியாவின் சஷாங் மனோகர் ஐசிசி சேர்மன் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இலங்கை முன்னாள் கேப்டன் மஹளா ஜெயவர்த்தனே ஆகியோருக்கு ஐசிசி கமிட்டியில் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இருவரும் மொத்தமாக 1996ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 1161 சர்வதேச போட்டிகளில் ஆடிய பெரிய அனுபவம் படைத்தவர்கள் ஆவர். இருவரும் தலா 3 ஆண்டு காலம் ஐசிசி கமிட்டியில் உறுப்பினராக இருப்பார்கள்.

ஐசிசி கமிட்டியின் முதல் கூட்டம் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய நாட்களில் லார்ட்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. அதில் இருவரும் கலந்து கொள்வார்கள். அதைத் தொடர்ந்து 3 வாரம் கழித்து ஐசிசியின் வருடாந்திர மாநாடு ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெறும்.

Rahul Dravid appointed to ICC Cricket Committee

குமார் சங்கக்கரா, எல். சிவராம கிருஷ்ணன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து டிராவிடும், ஜெயவர்த்தனேவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் டிம் மே-வும் ஐசிசி கமிட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.

ஐசிசி கமிட்டியின் - புதிய நிர்வாகிகள் விவரம்

சேர்மன் - அனில் கும்ப்ளே

எக்ஸ் அபிஷியோ - சஷாங் மனோகர் (ஐசிசி சேர்மன்), டேவிட் ரிச்சர்டன் (ஐசிசி தலைமை எக்சிகியூட்டிவ்)

முன்னாள் வீரர்களுக்கான பிரதிநிதி - ஆண்ட்ரூ ஸ்டிராஸ், மஹளா ஜெயவர்த்தனே

நடப்பு வீரர்களுக்கான பிரதிநிதி - ராகுல் டிராவிட், டிம் மே

முழு உறுப்பினர் அணி பயிற்சியாளர் பிரதிநிதி - டேரன் லெஹமான் (ஆஸ்திரேலியா பயிற்சியாளர்)

அசோசியேட் பிரதிநிதி - கெவின் ஓ பிரைய் (அயர்லாந்து ஆல் ரவுண்டர்)

மகளிர் கிரிக்கெட் பிரதிநிதி - கிளாரா கானர் (முன்னாள் இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன்)

முழு உறுப்பினர் பிரதிநிதி - டேவிட் ஒயிட்

மீடியா பிரதிநிதி - ரவி சாஸ்திரி.

நடுவர் பிரதிநிதி - ரிச்சர்ட் கீட்டில்போரா

போட்டி நடுவர் பிரதிநிதி - ரஞ்சன் மதுகல்லே

எம்சிசி பிரதிநிதி - ஜான் ஸ்டீபன்சன்

Story first published: Friday, May 13, 2016, 14:53 [IST]
Other articles published on May 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+