Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்டியா - ராகுல் விஷயம் போல இனி சர்ச்சை வராமல் இருக்க இது தான் வழி.. டிராவிட் சொல்லும் ஐடியா

Recommended Video

பண்டியா-ராகுல் சர்ச்சை : டிராவிட் சொல்லும் ஐடியா- வீடியோ

பெங்களூர் : இந்திய கிரிக்கெட் வீரர்கள் பண்டியா மற்றும் ராகுல் பெண்கள் குறித்து பேசிய சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விமர்சகர்கள் அதிகப்படியாக எதிர்வினை ஆற்ற வேண்டாம் என கூறியுள்ளார் முன்னாள் வீரரும், இந்தியா ஏ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்.

டிராவிட் கூறுகையில், இதற்கு முன்பு தவறுகள் நடக்கவில்லை அல்லது எதிர்காலத்தில் தவறுகள் நடக்காது என கூற முடியாது என்றார். டிராவிட் இந்த விவகாரத்தை எப்படி அணுகுகிறார்?

பண்டியா - ராகுல் சர்ச்சை

பண்டியா - ராகுல் சர்ச்சை

ஹர்திக் பண்டியா - ராகுல் இருவரும் காபி வித் கரன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அவர்கள் மீதி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தெளிவு இல்லை

தெளிவு இல்லை

இந்த இடை நீக்கம் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பதில் சரியான தெளிவு இல்லாத நிலையில் அவர்களது உலகக்கோப்பை அணியில் ஆடும் வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது. இந்த நிலையில் டிராவிட், இந்த விவகாரத்தில் விமர்சகர்கள் "ஓவர் - ரியாக்ட்" செய்யாமல் இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வினை வேண்டாம்

எதிர்வினை வேண்டாம்

டிராவிட் "தி ஹிந்து" பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், "வீரர்கள் இதற்கு முன்பு தவறுகள் செய்யவில்லை என்றும் கூறி விட முடியாது. நாங்கள் இளம் வீரர்களுக்கு எத்தனை அறிவுரை கூறினாலும், இனிமேல் தவறு செய்ய மாட்டார்கள் என கூறி விட முடியாது. ஆனால், தயவுசெய்து நாம் அதிக எதிர்வினை ஆற்றாமல் இருப்போம்" என தெரிவித்தார்.

மூத்த வீரர்களை பார்த்து வர வேண்டும்

மூத்த வீரர்களை பார்த்து வர வேண்டும்

மேலும், டிராவிட் தன் காலத்தில் யாரும் உட்கார வைத்து பாடம் நடத்தவில்லை. தான் பெற்றோர், பயிற்சியாளர்கள், மூத்த வீரர்களை பார்த்து இதையெல்லாம் கற்றுக் கொண்டேன் என தெரிவித்தார். சிறந்த கற்றல் என்பது உடை மாற்றும் அறையில் மூத்த வீரர்களை பார்த்து தான் ஏற்படும் எனவும் கூறினார் டிராவிட்.

சரியான வழி காட்டல்கள்

சரியான வழி காட்டல்கள்

இதற்கு முன்பு எல்லாமே சிறப்பாக இருந்தது, இன்று எல்லாமே மோசமாக இருக்கிறது என எடுத்துக் கொள்ள முடியாது என டிராவிட் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக இளம் வீரர்களுக்கு சரியான வழி காட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என டிராவிட் தெரிவித்தார்.

சிறப்பு வகுப்பு

சிறப்பு வகுப்பு

டிராவிட் தெரிவித்துள்ளது போல பண்டியா - ராகுல் விவகாரம் எழுந்த உடன் அண்டர் 23 அணி வீரர்கள், இந்தியா ஏ அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் என அனைவருக்கும் சிறப்பு வகுப்புகள் மூலம் பொது வெளியில் எப்படி நடந்து கொள்வது, நிதி மேலாண்மை போன்ற விஷயங்களை தெளிவுபடுத்த உள்ளதாக பிசிசிஐ-யின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

ஐபிஎல் தான் காரணமா?

ஐபிஎல் தான் காரணமா?

ஐபிஎல் போன்ற அதிக பணம் புழங்கும் விளையாட்டுத் தொடர் மற்றும் அதன் மேற்கத்திய கலாசார ரீதியிலான அணுகுமுறை போன்றவை தான் தற்போதைய இளம் வீரர்கள் பொது வெளியில் சர்ச்சைக்குரிய முறையில் நடந்து கொள்ள காரணமா?

Story first published: Tuesday, January 22, 2019, 11:02 [IST]
Other articles published on Jan 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+