Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு இவர்தான் பெஸ்ட் பயிற்சியாளராக இருப்பார்.. ரிக்கி பாண்டிங் சொல்வது யாரை தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்படுவார் என ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே உள்ள நிலையில் அவரின் பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியோடு முடிவடைகிறது.
இருப்பினும் கும்ப்ளேயின் ஒரு ஆண்டு பதவி காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பாத கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அவரது சம்பளம் மற்றும் வீரர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டதால் அவர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

மூவர் குழு

மூவர் குழு

டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரை கொண்ட 3 பேர் குழு பயிற்சியாளரை தேர்வு செய்யும். இதை மேற்பார்வையிட ஒரு மேற்பார்வையாளரையும் நியமிக்க உள்ளது பிசிசிஐ. புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலில் கும்ப்ளேயும் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜாம்பவான் டிராவிட்

ஜாம்பவான் டிராவிட்

இந்த நிலையில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் தற்போது இந்திய ‘ஏ' அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். அதேபோல

ஐ.பி.எல்.லில் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

சிறப்பாக செயல்படுவார்

சிறப்பாக செயல்படுவார்

இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது: இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் ராகுல் டிராவிட்டிடம் இருக்கிறது. அனைத்து இளம் வீரர்களின் உத்வேகமாக அவர் இருக்கிறார். அவர் மிகவும் கவனமாக செயல்படுவார். பல்வேறு அனுபவங்களை பெற்ற மூத்த வீரர் ஆவார்.

வேறு ஆள் இல்லை

வேறு ஆள் இல்லை

பயிற்சியாளர் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியம் தான். இந்தியரை தேர்ந்தெடுப்பதா அல்லது வெளிநாட்டவரை தேர்ந்தெடுப்பதா என்பது பிசிசிஐ விருப்பம்தான். ஆனால், டிராவிட்டை போன்ற சிறந்த வீரர் வேறு ஒருவர் இருப்பதாக கிரிக்கெட் வாரியம் கருதும் என்று நினைக்கவில்லை. டிராவிட் பயிற்சியாளர் பதவியை விரும்பினால் அவர் அதில் சிறப்பாக செயல்படுவார்.

முப்பரிணாமம் பார்த்தவர்

முப்பரிணாமம் பார்த்தவர்

டெஸ்ட், ஒருநாள், டி20 என, கிரிக்கெட்டின் 3 வகை ஆட்டத்தையும் சிறப்பாக அறிந்தவர் டிராவிட். கேப்டனின் விருப்பத்தை பொறுத்துதான் பயிற்சியாளர் தேர்வு இருக்கும் என கருதுகிறேன். இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 27, 2017, 17:05 [IST]
Other articles published on May 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+