For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நேற்று கேப்டன்சி.. இன்று இதுவா?”இந்திய அணியில் அடிவாங்கும் ஹர்திக் பாண்ட்யா.. டிராவிட் கூறிய உண்மை

தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

 முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

இதற்கான இந்திய அணியில் நேற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டது. கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்தே வெளியேறினார். இதனால் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். ஐபிஎல்-ல் அட்டகாசமாக கேப்டன்சி செய்து கோப்பை வென்ற ஹர்திக் பாண்ட்யா துணைக்கேப்டனாக மட்டுமே நியமிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

 புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் தற்போது மற்றொரு பிரச்சினையும் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா, அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதற்கு காரணம் அவர் டாப் ஆர்டரில் களமிறங்கி, ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஆடியது தான். ஒருமுறை கூட லோயர் ஆர்டரில் களமிறங்கவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் அவருக்கு 6வது இடம் தான் என உறுதியாகியுள்ளது.

டிராவிட்டின் விளக்கம்

டிராவிட்டின் விளக்கம்

இதுகுறித்து பேசியிருந்த ராகுல் டிராவிட், வீரர்கள் ஒன்றைய புரிந்துக்கொள்ள வேண்டும். ஐபிஎல்-ல் செய்த பணியை, இந்திய அணியில் செய்வது அதிக முறை நடக்கிறது தான். ஆனால் சில நேரங்களில் ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் வெவ்வேறு விதமான பணிகளை செய்ய வேண்டியது வரும். அதனை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஹர்திக் பாண்ட்யா டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக உள்ளார். அவரை போன்றோரை அணியில் சேர்த்தது மகிழ்ச்சியாக உள்ளது எனக்கூறினார்.

Recommended Video

Hardik Pandya, Dinesh Karthik குறித்து Rahul Dravid கொடுத்த Update | *Cricket
நம்பிக்கையான விஷயம்

நம்பிக்கையான விஷயம்

டாப் ஆர்டரில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், தற்போது இந்தியாவின் தூணாக ஹர்திக் தான் பார்க்கப்படுகிறார். ஏனென்றால் டாப் ஆர்டர் முழுவதும் ருதுராஜ், இஷான் கிஷான், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் என உள்ளனர். எனவே சீனியர் வீரராக லோயர் ஆர்டரில் காப்பாற்ற வேண்டியது ஹர்திக் பாண்ட்யா தான்.

Story first published: Thursday, June 9, 2022, 9:25 [IST]
Other articles published on Jun 9, 2022
English summary
Hardik pandya in IND vs SA series ( இந்தியா vs தென்னாப்பிரிக்க டி20 போட்டி ) இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடரில் ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் இடம் என்னவென்று தெரிந்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+