Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு நடந்தும் ராகுலுக்கு ஆதரவு.. டிராவிட் சொன்ன பதிலால் ரசிகர்கள் அதிருப்தி..ஊர் பாசம் தடுக்குதா?

டெல்லி : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கடந்த 12 இன்னிங்ஸில் ஒருமுறை அரை சதம் அடித்து தொடர்ந்து அணியில் நீடித்து வரும் கே எல் ராகுல் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்சில் கூட கேஎல் ராகுல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட பலரும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ராகுல் டிராவிட்டை மறைமுகமாக பலரும் சாடி வருகின்றனர். ஆனால் அது உண்மை தானோ என்பது போல் டிராவிட்டின் கருத்து அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ராகுல் டிராவிட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது கே எல் ராகுல் குறித்து உங்கள் கருத்து என்ன என்று அவர்கள் கேட்டனர்.

துணை நிற்கும்

துணை நிற்கும்

இதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட் கே எல் ராகுல் அவர் பயிற்சி செய்யும் முறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கே எல் ராகுல் துரதிஷ்டவசமான முறையில் இன்று ஆட்டம் இழந்தார். அனைவரின் வாழ்க்கையில் இது போன்ற சரிவுகளும், கடினமான காலமும் நிகழும். இதுகுறித்து அவர் கவலைப்பட கூடாது. இந்த கடினமான நேரத்தில் அணி நிர்வாகம் அவருக்குத் துணை நிற்கும்.

 மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

தொடர்ந்து கே எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்குவோம். ஏனென்றால் கே எல் ராகுல் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடிய தொடக்க வீரர். கே எல் ராகுல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கடினமான ஆடுகளங்களில் சதம் அடித்திருக்கிறார். எனவே நாங்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தருவோம் இந்த கடினமான காலத்தில் இருந்து அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

சஞ்சய் மஞ்சுரேக்கர் எதிர்ப்பு

சஞ்சய் மஞ்சுரேக்கர் எதிர்ப்பு

ராகுல் டிராவிட்டின் இந்த கருத்துக்கு சஞ்சய் மஞ்சுரேக்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கே எல் ராகுல் சதம் அடித்தார் என்று டிராவிட் சொல்கிறார். ஆனால் நாங்கள் கேட்பது எல்லாம், சதம் அடித்த பிறகு அவர் என்ன செய்கிறார் என்று தான். ஒரு சதம் அடித்து விட்டு தொடர்ந்து அணியில் இருப்பதில் நியாயம் அல்ல. கே எல் ராகுலுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ரசிகர்களும் கண்டனம்

ரசிகர்களும் கண்டனம்

இதனால் வாய்ப்புக்காக காத்திருக்கும் சுப்மன் கில் போன்ற வீரர்களை இந்திய அணியில் களம் இறக்க வேண்டும் என சஞ்சு மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். டிராவிட்டின் இந்த கருத்துக்கு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருவரும் ஒரே பெயர் மற்றும் ஒரே ஊர் என்பதால் அதன் அடிப்படையில் கே எல் ராகுலை டிராவிட் காப்பாற்றி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் ரோகித் சர்மா கேப்டனாக ஒரு அதிரடி முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதனிடையே, துணை கேப்டன் என்பதால் ராகுலை அணியை விட்டு நீக்க கூர்து என்று டிராவிட் வாதாடி உள்ளார். இதனால் கடுப்பான பிசிசிஐ, ராகுலை துணை கேப்டன் பதவியிலிருந்து எஞ்சியுள்ள டெஸ்டில் நீக்கியுள்ளது.

Story first published: Sunday, February 19, 2023, 16:47 [IST]
Other articles published on Feb 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+