Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்பா என்ன மனுஷன்யா.. ராகுல் டிராவிட் சொன்ன ஒரு வார்த்தை.. கொஞ்சமாவது பார்த்து திருந்துங்க பாஸ்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றி குறித்து முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவு கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.

4-0 என்று இந்தியா வொயிட்வாஷ் ஆகும் என்று பலரும் கணித்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி காரணமாக இந்திய அணியை உலக நாடுகள் திரும்பி பார்த்துள்ளது.

வெற்றி காரணம்

வெற்றி காரணம்

இந்திய டெஸ்ட் அணியின் இந்த வெற்றிக்கு யார் காரணம் என்று பிசிசிஐ அமைப்பில் நிறைய விவாதம் நடந்து வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு ரஹானேதான் காரணம் என்று சிலர் குறிப்பிட்டு வருகிறார்கள். ரஹானேவின் கேப்டன்சிதான் அணியின் வெற்றிக்கு காரணம் என்று பிசிசிஐ அமைப்பில் சிலர் கருதுகிறார்கள்.

இந்திய அணி

இந்திய அணி

அதே சமயம் இன்னொரு பக்கம் இந்திய அணியின் வெற்றிக்கு கோலி உருவாக்கிய டீம்தான் காரணம் என்றும் சிலர் கருதுகிறார்கள். கோலிதான் இந்த பவுலிங் படையை உருவாக்கியது. கோலி அணியில் இல்லாமல் இந்திய அணி வென்றாலும், இது கோலி உருவாக்கிய அணிதான் என்று ஒரு சிலர் வாதம் வைக்கிறார்கள்.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

இன்னும் சிலர் ரவி சாஸ்திரிதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர், பண்ட், சிராஜ் போன்ற முக்கிய வீரர்கள் எல்லோரும் டிராவிட் கொடுத்த பயிற்சி மூலம் வளர்ந்தவர்கள். இவர்களை அடையாளபடுத்தியதே டிராவிட்தான்.

டிராவிட்

டிராவிட்

இந்திய அணியின் எதிர்கால வீரர்களை உருவாக்கியதில் டிராவிட் முக்கிய பங்கு வகித்தார். இதனால் டிராவிட்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். டிராவிட் உருவாக்கிய வீரர்கள்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த காரணமாக இருந்தனர் என்று கருத்துக்கள் வைக்கப்பட்டது.

மறுப்பு

மறுப்பு

இந்த நிலையில் டிராவிட் இதை மறுத்துள்ளார். அதில், இந்திய அணியின் வெற்றிக்கு நான்தான் காரணம் என்று சொல்ல முடியாது. அது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட வாதம். நான் எனது பணியை செய்தேன்.

வீரர்கள்

வீரர்கள்

இந்த வெற்றி அந்த இளம் வீரர்களின் சொந்த முயற்சியால் நடந்த வெற்றி. அவர்களின் கடின உழைப்பால்தான் இது சாத்தியம் ஆனது. இதில் நான் எதுவும் செய்யவில்லை. அந்த இளம் வீரர்கள்தான் முழுக்க முழுக்க இந்த வெற்றிக்கு சொந்தக்காரர்கள் என்று டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்

சூப்பர்

இந்திய அணியின் வெற்றிக்கு சொந்தம் கொண்டாட பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். நாங்கள்தான் இந்திய அணியை வெற்றிபெற வைத்தோம் என்று பலரும் கூறி வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் டிராவிட் மட்டும் பெருந்தன்மையோடு என்னை பாராட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, January 25, 2021, 11:44 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+