Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனது கருத்து விராட் கோலிக்கு பிடிக்காது.. ஆனாலும் இதுதான் உண்மை.. ரகசியம் உடைத்த ராகுல் டிராவிட்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் உயரம் குறைவாக இருக்கும் பேட்ஸ்மேன்கள் ஜொலிப்பதற்கான காரணம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பேசி இருக்கிறார். உயரம் குறைவான வீரர்கள் பட்டியலில் பிராட்மேன் தொடங்கி ரிக்கி பாண்டிங் வரை சேர்த்த ராகுல் டிராவிட், கடைசியாக விராட் கோலியையும் சேர்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் உயரம் குறைவான பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சாதகம் இருந்து வருகிறது. உயரம் குறைவாக இருக்கும் பேட்ஸ்மேன்களால் எந்த லெந்தில் பந்து பிட்ச்சாகும் என்பதை விரைவாக கணிக்க முடியும். இதனால் அவர்களால் விரைவாக என்ன ஷாட் ஆட வேண்டும் என்பதை முடிவு செய்ய முடிகிறது. டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

Rahul Dravid Explains

ஏன் லாராவின் உயரம் கூட குறைவான ஒன்றுதான். இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கை சுனில் கவாஸ்கரை பார்த்துதான் தொடங்கியது. என்னை பொறுத்தவரை கவாஸ்கர் ஒரு பேலன்ஸான வீரர். சுனில் கவாஸ்கரால் நின்ற இடத்தில் இருந்து எந்தவொரு ஷாட்டையும் விளையாட முடியும். அது எனக்கு ஊக்கமாக அமைந்தது.

சுனில் கவாஸ்கருடன் ஒப்பிடும் போது நான் கொஞ்சம் உயரம் அதிகம். அதனால் சுனில் கவாஸ்கரிடம் இருந்து காப்பி செய்து கொள்ள எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவரது பேட்டிங் ஸ்டான்ஸ் நான் பின்பற்றினால், எனக்கு சிக்கல் தான். ஆனால் சச்சின் டெண்டுல்கருக்கு அப்படியல்ல. உயரம் குறைவான பேட்ஸ்மேன்கள் மிகவும் நல்ல பேலன்ஸ் உடன் நிற்பார்கள்.

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் உள்ள ஏராளமானோர் உயரம் குறைவான பேட்ஸ்மேன்கள் தான். கவாஸ்கர், லாரா, ரிக்கி பாண்டிங், பிராட்மேன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வளவு ஏன், விராட் கோலியும் உயரம் குறைவானவர் தான். நான் சொல்வது விராட் கோலிக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை.

சமகால கிரிக்கெட் விரைவாக மாறி வருகிறது. தற்போது பவர் மற்றும் சிக்ஸ் அடிப்பதில் வீரர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதனால் உயரம் அதிகமுள்ள பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் சாதகம் ஏற்படுகிறது. கெவின் பீட்டர்சன், பொல்லார்ட் போன்ற வீரர்கள் டி20ல் தாக்கல் ஏற்படுத்தியதற்கு அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். விராட் கோலியின் உயரம் 5.9 என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 28, 2025, 13:50 [IST]
Other articles published on Aug 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+