Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பசங்க அப்போவே சொன்னாங்க”.. இந்தியாவின் தோல்விக்கு இருந்த ஒரே காரணம்.. ராகுல் டிராவிட் விளக்கம்!

அடிலெய்ட்: இங்கிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்று ஏமாற்றினர். பின்னர் கோலி மற்றும் பாண்ட்யாவின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.

இந்தியாவின் படுதோல்வி

இந்தியாவின் படுதோல்வி

கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஓப்பனிங் தரமாக இருந்தது. ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சேர்ந்து இந்தியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் 16 ஓவர்களிலேயே அந்த அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 170 ரன்கள் அடித்து வெற்றி கண்டது. லீக் சுற்றில் அபார வெற்றிகளை குவித்த இந்தியா, நாக் அவுட்டில் மோசமாக தோற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

டிராவிட்டின் விளக்கம்

டிராவிட்டின் விளக்கம்

இந்நிலையில் இதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது ஆனால் இன்று எங்களுக்கான நாளாக இல்லை. முக்கிய போட்டிகளில் நிறைய ரன்கள் தான் உதவும். 15 - 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ஒருவேளை 180+ ரன்களை அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

வீரர்களின் குற்றச்சாட்டு

வீரர்களின் குற்றச்சாட்டு

இந்திய அணியும் அதிக ரன் அடிக்கதான் முயன்றது. ஆனால் பிட்ச்- மிகவும் மெதுவாக இருந்ததால் ரன்களை அடிக்கவே முடியவில்லை என வீரர்கள் கூறினர். எனினும் இதில் நாங்கள் செய்த தவறுகளை இனி சரிசெய்துக்கொள்வோம். எதிர்காலத்தில் வரும் போட்டிகளில் கவனம் செலுத்தப்போகிறோம் என டிராவிட் கூறினார்.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இதுகுறித்து பேசியிருந்த ரோகித் சர்மா, நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக தான் இருந்தோம். ஆனால் பவுலிங்கில் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. தொடக்கத்திலேயே சற்று பதற்றத்துடன் காணப்பட்டோம். அதனை இங்கிலாந்து வீரர்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர் எனக் கூறியிருந்தார்.

Story first published: Thursday, November 10, 2022, 19:15 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+