Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல் டிராவிட்.. காரை இடித்ததால் கடும் ஆத்திரம்- வீடியோ

பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டாக பார்க்கப்படும். ஆனால் பல வீரர்கள் களத்தில் எப்போதும் எதிர் அணி வீரர்களை திட்டுவது மோதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், உண்மையான ஜென்டில்மேன் ஆக நடந்து கொள்ளும் போது ராகுல் டிராவிட் மட்டும்தான் எவ்வளவு கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.

rahul dravid india vs england bengaluru

எப்போதுமே களத்தில் அமைதியாக இருப்பார். களத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ராகுல் டிராவிட் ஒரு ஜென்டில்மேன் தான் ராகுல் டிராவிட் நற்குணத்தை சோதிக்கும் விதமாக பல ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் செய்ய வந்த பெண் ஒருவர் ராகுல் டிராவிட்டிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் ராகுல் டிராவிட் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அந்த பெண்ணை கடுமையாக கண்டித்தார்.

கடைசியில் அது பிராங்க் என தெரிய வந்தது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக மீண்டும் சேர்ந்து இருக்கிறார். இந்த சூழலில் ராகுல் டிராவிட் பெங்களூருவில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர் ஒருவர் காரை இடித்ததாகவும், இதனால் கடுப்பான ராகுல் டிராவிட் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

டிராவிட் இப்படி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று அங்கு இருந்தவர்களும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு சிலர் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களால் ராகுல் டிராவிட்டுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிலர் இது விளம்பரமாக கூட இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அண்மையில் இப்படித்தான் ராகுல் டிராவிட் கார்னில் ஏறி நின்று கத்தி கொண்டு இருக்கும் ஒரு காட்சி வைரலானது கடைசியின் அது விளம்பரம் என தெரிய வந்தது. ஆனால் இது உண்மையான விபத்தாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது இந்த விபத்தில் யாருக்கும் நல்வாய்ப்பாக காயம் ஏற்படவில்லை.

Story first published: Wednesday, February 5, 2025, 11:45 [IST]
Other articles published on Feb 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+