For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெருமையின் உச்சம்.. தன்னை அறியாமல் எழுந்து நின்ற டிராவிட்.. தீபக் சாஹருக்காக செய்த நெகிழ்ச்சி விஷயம்

கொழும்பு: இலங்கை தொடரை வென்று கொடுத்த தீபக் சாஹரின் இன்னிங்ஸை பார்த்து ராகுல் டிராவிட் தன்னை அறியாமல் எழுந்து நின்று கைத்தட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Rahul Dravid's Special speech in dressing room after India's win| IND vs SL 2nd ODI | OneIndia Tamil

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி தோல்வியின் விளிம்பு வரை சென்ற போதும், தீபக் சாஹரின் சிறப்பான ஆட்டம் வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாக அமைந்தது.

 அடுத்தடுத்து விக்கெட்டுகள்

அடுத்தடுத்து விக்கெட்டுகள்

இலங்கை அணி நிர்ணயித்த 276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 13 ரன்களுக்கும், ஷிகர் தவான் 29 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் 1 ரன்னும், மணிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து வெளியேறினர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 53 ரன்களை விளாசி அவுட்டானார். யாதவின் விக்கெட் வீழ்ந்த பின்னர் இந்திய அணி தோற்பது உறுதி என்ற நிலை உருவானது.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

ஆனால் ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ரன் குவிக்க முடியாமல் திணறிய சூழலில் தீபக் சாஹர் இலங்கை பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். நிதனமாக ரன்களை உயர்த்திய அவர், 82 பந்துகளை சந்தித்து 69 ரன்களை குவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில், தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அவர் அசத்தினார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த புவனேஷ்வர் குமார் 19 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆடிப்போன டிராவிட்

ஆடிப்போன டிராவிட்

ஒரு பந்துவீச்சாளர் இவ்வளவு சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினாரா என மைதானத்தில் இருந்த இலங்கை வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர். இதில் சுவாரஸ்ய சம்பவமாக, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை அறியாமலேயே எழுந்து நின்று நெகிழ்ச்சியில் கைத்தட்டினார். 19 வயதுகுட்பட்டோருக்கான அணியில் டிராவிட்டின் பயிற்சியில் வளர்ந்தவர் தீபக் சாஹர். தனது பயிற்சி வீண் போகவில்லை என அவர் நெகிழ்ச்சியுடன் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாதவின் செயல்

யாதவின் செயல்

இதுமட்டுமல்லாமல், ஓய்வு அறையில் உட்கார்ந்திருந்த சூர்யகுமார் யாதவ், ஷூ கூட அணியாமல் வேக வேகமாக மைதானத்திற்குள் ஓடி வந்து தீபக் சாஹரை கட்டிப்பிடித்து தழுவிய வீடியோவும் வைரலாகி வருகிறது. அரைசதம் அடித்தும் இந்திய அணியை மீட்க முடியவில்லை என வருத்தத்துடன் வெளியேறிய சூர்யகுமார் யாதவ், தனது பணியை சிறப்பாக செய்து முடித்த சாஹருக்கு பாராட்டு தெரிவித்தார். அவருக்கு ரசிகர்களும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, July 21, 2021, 12:52 [IST]
Other articles published on Jul 21, 2021
English summary
Rahul Dravid Gives a Standing ovation for Deepak Chahar in 2nd ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X