Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. இதுக்கெல்லாமா பயிற்சி கொடுப்பீங்க.. இந்தியாவின் பயிற்சி போட்டி.. டிராவிட் தந்த ட்விஸ்ட்

பெர்த்: டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டை கொடுத்துள்ளார் ராகுல் டிராவிட்.

கிரிக்கெட் திருவிழாவான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சி போட்டி

பயிற்சி போட்டி

பெர்த் நகரத்தில் உள்ள இந்திய அணி, அங்கு உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் மோதி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.

டிராவிட் தந்த ட்விஸ்ட்

டிராவிட் தந்த ட்விஸ்ட்

இந்நிலையில் போட்டியின் தொடக்கத்திலேயே பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா இருந்த போதும், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் முழுவதும் அவரின் திட்டங்களும் முடிவுகளுமே செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஆஸ்திரேலிய களத்தில் பவுலர்களை ரொட்டேட் செய்வது வித்தியாசமான ஒன்றாகும். ஒருவேளை ரோகித் சர்மாவுக்கு ஏதேனும் காயம், ஓய்வு தேவைப்பட்டால், துணைக்கேப்டனான கே.எல்.ராகுல் சரியாக கேப்டன்சி செய்ய வேண்டியது அவசியம். எனவே அவரை ஆஸ்திரேலிய களத்திற்கு ஏற்ப முடிவெடுக்க வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராகுலின் கேப்டன்சி

ராகுலின் கேப்டன்சி

கே.எல்.ராகுல் கேப்டன்சி இந்தியாவிலேயே சில சமயங்களில் எடுபடாது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் ஸ்விங்கும், வேகமும் அதிகம் இருக்கும். மிடில் ஓவர்களில் ஸ்லோவர் பந்துகளை வைத்துக்கூட ரன்வேகத்தை கட்டுப்படுத்தலாம். எனவே அந்த கால சூழலுக்கு ஏற்ப கேப்டன்களும் முடிவெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 13, 2022, 12:49 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+