For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாலிசி முக்கியமா வெற்றி முக்கியமா??.. 4வது டி20ல் டிராவிட்டிற்கு வந்த சோதனை.. என்ன முடிவு எடுப்பார்?

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டியில் ரோகித் சர்மாவுக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில் நடைபெறவிருக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 - 1 என முன்னிலை வகித்து வரும் சூழலில் இன்று தொடரை கைப்பற்ற முனைப்புடன் உள்ளது.

 4வது டி20

4வது டி20

முக்கியமான இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் தான் குழப்பம் உருவாகியுள்ளது. ஓப்பனிங்கிற்கு வழக்கம் போல கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளனர். ஆனால் முதல் விக்கெட்டிற்கு தான் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். குறிப்பாக பவுன்சர் பந்துகளுக்கே தனது விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.

 ப்ளேயிங் 11 மாற்றங்கள்

ப்ளேயிங் 11 மாற்றங்கள்

இதுவரை நடைபெற்றுள்ள 3 டி20 போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 0, 10, 23 என சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினார். எனவே இவரை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. மற்றொரு புறம் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா என காத்துக்கொண்டுள்ளார். இவருக்கு வாய்ப்பு தருவதில் தான் டிராவிட் குழப்பத்தில் உள்ளார்.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

ஃபார்ம் அவுட்டான வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் தர வேண்டும், அப்போது தான் அவர்களால் சுலபமாக கம்பேக் கொடுக்க முடியும் என்ற திட்டத்தை வைத்திருப்பவர் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா. அந்த வகையில் தான் சூர்யகுமார் யாதவ் தரமான கம்பேக் தந்திருக்கிறார். எனவே ஆசியக்கோப்பை திட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பதால், அவருக்கு வாய்ப்பு கொடுத்து மீட்க வேண்டும் என்ற திட்டமும் போடலாம். எனவே ரிஸ்க் எடுப்பாரா அல்லது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மற்றொரு திருப்பம்

மற்றொரு திருப்பம்

இதே போல சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறுவாரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. ஆசியக்கோப்பை தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு தர அதிக வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க, குல்தீப் யாதவும் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Saturday, August 6, 2022, 17:10 [IST]
Other articles published on Aug 6, 2022
English summary
India vs west indies 4th t20 match ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 4வது டி20 போட்டி ) வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டிக்கான இந்திய அணி ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் டிராவிட்டிற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+