Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி.. ப்ளேயிங் 11ல் தினேஷ் கார்த்திக்கின் நிலைமை என்ன??.. டிராவிட் தடாலடி

டெல்லி:தென்னாப்பிரிக்க தொடரில் ரசிகர்களிடையே நீடித்து வந்த குழப்பத்திற்கு ராகுல் டிராவிட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9ம் தேதி தொடங்குகிறது.

இரு அணிகளும் மோதும் முதல் போட்டி டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

Recommended Video

Hardik Pandya, Dinesh Karthik குறித்து Rahul Dravid கொடுத்த Update | *Cricket
தென்னாப்பிரிக்க டி20 தொடர்

தென்னாப்பிரிக்க டி20 தொடர்

இந்த தொடருக்கான இந்திய அணியில் பெரும் சர்ஃப்ரைஸாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் கம்பேக் கொடுத்திருந்தனர். ஐபிஎல் தொடரில் கலக்கியதால், நீண்ட நாட்களுக்கு பின்னர் அவர்கள் அணிக்கு வந்தனர். எனினும் இதில் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே விளையாடுவார் என்றும், தினேஷ் கார்த்திக் பெஞ்சில் தான் அமரவைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

நீடித்த குழப்பம்

நீடித்த குழப்பம்

இந்திய அணியில் தற்போது ஓப்பனிங்கிற்கு கே.எல்.ராகுல் - இஷான் கிஷான் உள்ளனர். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா உள்ளனர். இவர்களை தொடர்ந்து பண்ட் இருக்கிறார். பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதால், 6வது வீரராக ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படலாம். மற்றொரு ஃபினிஷராக தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்காது என தகவல் வெளியானது.

டிராவிட்டின் விளக்கம்

டிராவிட்டின் விளக்கம்

இந்நிலையில் இதற்கு ராகுல் டிராவிட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. தினேஷ் கார்த்திக்கின் பணி தெளிவாக உள்ளது. அணியின் லோயர் ஆர்டரில் எத்தகைய தாக்கத்தையும் அவர் ஏற்படுத்துவார். அதனால் தான் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல்-ல் செய்ததை போன்றே இந்திய அணியிலும் செய்வார் எனக்கூறினார்.

பாண்ட்யா இருக்கிறார்

பாண்ட்யா இருக்கிறார்

தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா குறித்து பேசிய அவர், ஐபிஎல்-ல் பாண்ட்யாவின் கேப்டன்சி மிகவும் அருமையாக இருந்தது. எங்களை பொறுத்தவரையில் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து சிறந்த பேட்டிங் மற்றும் பவுலிங் திறமைகளை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனக்கூறியுள்ளார்.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

ராகுல் டிராவிட்டின் இந்த பேச்சால், ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் எனத்தெரியவந்துள்ளது. தீபக் ஹூடா நீக்கப்படலாம். ஹர்திக்கை டாப் ஆர்டரில் களமிறக்கிவிட்டு, தினேஷ் கார்த்திக்கை ஃபினிஷராக பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

Story first published: Tuesday, June 7, 2022, 19:15 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+