பிங்க் பந்தில் முதல் சதம் அடித்த இந்தியர் கோலி இல்லை.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
Recommended Video
டெல்லி : பிங்க் பால் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராத் கோலி தட்டி சென்றுள்ள நிலையில், பிங்க் பால் கிரிக்கெட்டில் முதன் முதலில் சதம் அடித்தவர் என்ற பெருமையை கடந்த 2011லேயே ராகுல் டிராவிட் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2011ல் இங்கிலீஷ் கிரிக்கெட் கிளப்பிற்காக களமிறங்கிய ராகுல் டிராவிட் இரண்டாவது இன்னிங்சில் 106 ரன்கள் அடித்து நாட்டிங்காம்ஷயர் தோல்வியை தழுவ முக்கிய காரணமானார்.
அபுதாபியில் நடைபெற்ற இந்த சர்வதேச போட்டியில்தான் முதன்முதலில் பிங்க் பால்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தப் போட்டியில் எம்.சி.சி. அணி 174 ரன்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சதமடித்த முதல் இந்திய வீரர் கோலி
கொல்கத்தாவில் கடந்த 22ம் தேதி துவங்கிய இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக களம் கண்ட இந்திய கேப்டன் விராத் கோலி, 136 ரன்கள் அடித்து, பகலிரவு போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பிடித்துள்ளார்.

பிங்க் பால் கிரிக்கெட்டில் முதல் சதம்
இந்நிலையில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டே பிங்க் பால் கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்பதும் கடந்த 2011லேயே அவர் இந்த சாதனையை ஏற்படுத்திவிட்டதும் தெரியவந்துள்ளது.

106 ரன்களை குவித்த ராகுல் டிராவிட்
கடந்த 2011ல் அபுதாபியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் எம்.சி.சி. அணி சார்பில் விளையாடிய ராகுல் டிராவிட் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆக, இரண்டாவது இன்னிங்கிசில் 106 ரன்களை குவித்து சாதனை மேற்கொண்டார்.

அபுதாபியில் நடைபெற்ற பிங்க் கிரிக்கெட்
முதல்முறையாக பிங்க் பந்தை வைத்து சோதனை முறையில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆப்கானிஸ்தானின் முகமது நபி, அமித் ஹாசன், ஆஸ்திரேலியாவின் கிரிஸ் ரோகர்ஸ், இங்கிலாந்தின் டேவிட் மலன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இங்கிலாந்தின் முதல்தர ஆட்டக்காரர் ஜேக் பாலின் முதல் ஆட்டமாக இது இருந்தது.

முதல் சதமடித்த இந்திய வீரர்
முதல் முறையாக சோதனை ஆட்டமாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் விளையாடிய ராகுல் டிராவிட் முதல் இன்னிங்கில் தடுமாறிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 106 ரன்களை எடுத்து சாதனை மேற்கொண்டார். இதன்மூலம் எம்சிசி அணி 174 ரன்களில் பிரமாண்ட வெற்றி பெற்றது.

பிங்க் பால் டெஸ்ட் போட்டி
இதன்மூலம் பிங்க் பாலில் நடத்தப்பட்ட டெஸ்ட் போட்டியில் கடந்த 2011லிலேயே சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான ராகுல் டிராவிட் இந்த சாதனையிலும் முதலிடத்தை பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications