For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களுக்கு மட்டும் இல்ல, எல்லாருக்கும் அந்த பிரச்சினை இருக்கு.. சூடான பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

இந்தூர் : டி20 உலககோப்பை தொடருக்கான தயாரிப்பு பணிகள் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், டி20 உலககோப்பை போன்ற தொடரில் விளையாடும் போது உங்களுக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் தேவை என்று கூறினார்.

அதிர்ஷ்டம் தேவை

அதிர்ஷ்டம் தேவை

ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் போது எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஆனால், ஆஸ்திரேலியா தொடரின் போது எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. டி20 போட்டியில் வெற்றி வாய்ப்பு எப்போதும் இரு அணிக்கும் இருக்கும். இதனால் லக் தான், அதனை முடிவு செய்யும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என இரு அணிகளுடன் சொந்த மண்ணில் ரசிகர்கள் முன் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

சவால்கள்

சவால்கள்

எங்களுக்கு இரு தொடர்களும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. இந்த தொடரில் எங்கள் அணியை சுழற்சி முறையில் பயன்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. எந்த இடத்தில் யாரை களமிறக்கலாம் என்பது குறித்து ஒரு முடிவு எடுக்க முடிந்தது. இன்னும் பல விசயங்களில் நாங்கள் முன்னேற வேண்டியது இருக்கிறது.

அனைவருக்கும் பிரச்சினையே

அனைவருக்கும் பிரச்சினையே

நாங்கள் விளையாடிய மைதானங்கள் பெரும்பாலும் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவார்கள் தான். இதன் காரணமாக தான், எங்களுடைய டேத் பவுலிங்கில் அதிக ரன்கள் சென்றது. நீங்கள் கவனித்தால் தெரியும், இந்தியா மட்டுமல்ல அனைத்து அணிகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.

மாற்றிவிட்டோம்

மாற்றிவிட்டோம்

நாங்கள் கடந்த டி20 உலககோப்பையில் அடைந்த தோல்விக்கு பிறகு புதிய கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுடன் ஆலோசனை செய்தேன். அப்போது இந்திய அணியின் விளையாட்டு ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அப்போது இனி டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது என முடிவு எடுத்தோம். அதன் படி தான் நடந்து கொள்கிறோம்.

Story first published: Wednesday, October 5, 2022, 11:23 [IST]
Other articles published on Oct 5, 2022
English summary
Rahul dravid latest press conference about team india performance ahead of t20 wc எங்களுக்கு மட்டும் இல்ல, எல்லாருக்கும் அந்த பிரச்சினை இருக்கு.. சூடான பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+