For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து வீரர்களுக்கு டிராவிட் அனுப்பிய மெயில்.. இந்தியாவிற்கே சிக்கலாகும் நிலை.. என்ன நடந்தது?

சென்னை: இங்கிலாந்து அணியை சேர்ந்த வீரர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் அனுப்பிய மெயில் ஒன்று தற்போது இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

ஆஸ்திரேலியா தொடருக்கு அடுத்த மிக முக்கியமான கிரிக்கெட் தொடரான இங்கிலாந்து - இந்தியா இடையிலான தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது.

டெஸ்ட் உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்திய அணி இந்த தொடரில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இலங்கை

இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணியை இங்கிலாந்து எதிர்கொள்ள உள்ளது. இலங்கை அணியை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இங்கிலாந்து ஒப்பனர்கள் கொஞ்சம் திணறினார்கள்.

திணறல்

திணறல்

இலங்கை அணியின் ஸ்பின் பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள். இங்கிலாந்து டாப் ஆர்டர் சரியவே இலங்கையின் ஸ்பின் பவுலிங்தான் காரணமாக இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்களுக்கு டிராவிட் அப்போது ஆலோசனை வழங்கி இருந்தார்.

ஆலோசனை

ஆலோசனை

இங்கிலாந்து வீரர்கள் இலங்கையின் ஸ்பின் பவுலிங்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் எங்கே தவறு செய்கிறார்கள். என்ன பிரச்சனை என்பதை சுட்டிக்காட்டி டிராவிட் கெவின் பீட்டர்சனுக்கு மெயில் அனுப்பி இருந்தார். இந்த மெயிலை கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து வீரர்களுடன் பகிர்ந்து இருந்தார்.

பகிர்வு

பகிர்வு

தற்போது இங்கிலாந்து அணி டிராவிட்டின் அறிவுரையை இந்திய அணிக்கு எதிராக பயன்படுத்தும் என கூறப்படுகிறது. டிராவிட் கற்றுக்கொடுத்த வித்தையை இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஸ்பின் பவுலிங்கை பயன்படுத்த இந்திய அணி வெற்றிபெறலாம் என்று திட்டமிட்டு இருந்தது.

சென்னை

சென்னை

இதற்காக சென்னை பிட்சை ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி தயார் செய்து இருந்தனர். ஆனால் தற்போது டிராவிட் கொடுத்த அறிவுரை காரணமாக இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கை இங்கிலாந்து அணி எளிதாக எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிராவிட் அறிவுரையை இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 4, 2021, 16:36 [IST]
Other articles published on Feb 4, 2021
English summary
Rahul Dravid mail may help England players against Team India in spin bowling.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+