நீங்களுமா டிராவிட் இப்படி? 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி.. கடைசி நேரத்தில் குழப்பும் டிராவிட்!
இந்தூர்: ஆஸ்திரேலியா அணியுடனான 3வது டெஸ்ட் போடிக்காக இந்திய அணியின் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட நேரத்தில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்துள்ள விநோத விஷயத்தால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்தூருக்கு வந்தடைந்த இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். முதல் 2 போட்டிகளை போலவே இதிலும் வெற்றி காண இந்திய வீரர்களும், தோல்விக்கு பதிலடி கொக்க ஆஸ்திரேலிய வீரர்களும் முணைப்பு காட்டுகின்றனர்.

ப்ளேயிங் 11 பிரச்சினை
3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பம் ஒன்று நீடித்து வருகிறது. அதற்கு காரணம் கே.எல்.ராகுல் தான். இந்த தொடரில் அவர் விளையாடியுள்ள 3 இன்னிங்ஸ்களிலும் தொடர்ச்சியாக சொதப்பியதால் டாப் ஆர்டர் சரிந்து வருகிறது. இதனையடுத்து அவரை துணைக்கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

வாய்ப்பு யாருக்கு
துணைக்கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் 3வது போட்டியில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு, நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் ராகுல் மீது அதீத நம்பிக்கை உள்ளது, என்ன ஆனாலும் அவரை விட்டுக்கொடுக்க மாட்டோம் என ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கூறினர். இதனால் என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

ராகுல் டிராவிட் செயல்
இந்நிலையில் அவர்களை மேலும் குழப்பியுள்ளார் ராகுல் டிராவிட். இந்தூரில் வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென களமிறங்கிய ராகுல் டிராவிட், பந்து வீச தொடங்கிவிட்டார். இளம் வீரர் சுப்மன் கில்லை மட்டும் தனியாக அழைத்து நீண்ட நேரம் அவருக்கு பந்துவீசி சோதனை செய்து பார்த்துள்ளார். கில்லின் செயல்பாடுகள் தற்போது எப்படி உள்ளது என்பதை கவனித்துள்ளார்.

கைவிட்டார்களா?
பயிற்சியின் போது கில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் டிராவிட், தீவிரமாக தயார்படுத்தி வருகிறார். இதனால் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா ஆகியோரும் தற்போது கே.எல்.ராகுலை கழட்டிவிடும் முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. மறுபுறம் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் கே.எல்.ராகுலும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications