Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர் எங்கேயும் போக மாட்டார்”.. கே.எல்.ராகுலின் விவகாராம்.. ராகுல் டிராவிட் தடாலடி முடிவு!

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் சொதப்பியதாக கே.எல்.ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்ட சூழலில் அவரை விட்டுக்கொடுக்காமல் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தடாலடி முடிவெடுத்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் பெற்று வருகிறது.

இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதியன்று தொடங்குகிறது. இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் ஃபார்ம்

கே.எல்.ராகுல் ஃபார்ம்

என்னதான் இந்திய அணி பலமாக இருந்தாலும், இனி ஓப்பனிங்கில் யார் களமிறங்குவார் என்ற குழப்பம் பெரும் அளவில் உள்ளது. இதற்கு காரணம் கே.எல்.ராகுலின் சொதப்பல் தான். தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வந்ததால் அவரை துணைக்கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். அந்த பதவியால் தான் நீக்க முடியாமல் இருந்தது என்ற விமர்சனங்கள் இருந்த சூழலில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உள்நாட்டு தொடர்

உள்நாட்டு தொடர்

இதனையடுத்து கே.எல்.ராகுல் உள்நாட்டு தொடர்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சிறப்பாக விளையாடி நிரூபித்துக்காட்டினால் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்குள் வர முடியும் என வல்லுநர்கள் கூறினர். அதன்படி பார்த்தால் தற்போது இரானி கோப்பை மட்டும் தான் நடந்து வருகிறது. இதற்காக ராகுல் திருப்பி அனுப்பப்படுவார் எனக்கூறப்பட்டது.

 தடாலடி முடிவு

தடாலடி முடிவு

இந்நிலையில் இந்த செயலை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தடுத்து நிறுத்தியுள்ளனர். கே.எல்.ராகுலை இரானி கோப்பைக்கு அனுப்பப்போவதில்லை என முடிவெடுத்துள்ளனர். இதற்காக தேர்வுக்குழு மற்றும் பிசிசிஐ-யிடம் தெளிவாக தகவல் கூறிவிட்டனர். தொடர்ச்சியாக இந்திய அணியுடனே இருந்து தான் அவர் கம்பேக் தருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதன் மூலம் 3வது போட்டியில் மீண்டும் கே.எல்.ராகுல் தான் ஓப்பனிங் ஆடுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து சதமடித்து சுப்மன் கில் நல்ல ஃபார்முடன் காத்துள்ளார். 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்கு வீரர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தது தான் காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே தொடர்ச்சியாக ஒரு வீரரை ஆதரித்து, அவர் கம்பேக் தரும் வரை வாய்ப்பு கொடுக்க டிராவிட் முடிவெடுத்துள்ளார்.

Story first published: Sunday, February 26, 2023, 20:44 [IST]
Other articles published on Feb 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+