Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் கிரிக்கெட் பயிற்சியாளராகிறார் ராகுல் டிராவிட்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் . தற்போது, 19 வயதுக்கு உட்பட்டோருக்குக்கான அணியின் பயிற்சியாளாரக இருக்கிறார். டிராவிட்டின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் சிறந்த வீரர்களாக தங்களை நிரூபித்துள்ளார்கள்.

 Rahul Dravid may be nominated as trainer to Indian cricket team

அவரது கை பட்டு ஜொலித்தவர்கள் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளிலும் கலக்கி வருவதை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் டிராவிட் அடுத்து இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ நிர்வாகக் கமிட்டி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பி.சி.சி.ஐயின் இந்த முடிவுக்கு ராகுல் டிராவிட்டும் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டிராவிட் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டால், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளேவுக்கு, இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Story first published: Monday, March 13, 2017, 11:11 [IST]
Other articles published on Mar 13, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+