ஆர்சிபிக்காக மட்டுமல்ல பெங்களூர் ரசிகர்கள் அனைத்து விளையாட்டுக்கும் ஆதரவு தருவாங்க- டிராவிட் கருத்து
பெங்களூர்: ஆர்சிபி வெற்றி விழாவை காண வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததற்கு இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ராகுல் டிராவிட் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மற்றும் அதைச் சுற்றி சுமார் 2.5 லட்சம் ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்களை பார்க்க கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர். இது குறித்து பெங்களூரில் பிறந்து வளர்ந்த ராகுல் டிராவிட் தனது மவுனத்தை கலைத்துள்ளார். இந்த சம்பவம் என் மனதை உலுக்கிவிட்டது. நிச்சயமாக மிகவும் வருத்தமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்,"

"ஆர்சிபிக்காக மட்டுமல்ல பொதுவாகவே பெங்களூர் ஒரு விளையாட்டு ஆர்வம் நிறைந்த நகரம். நான் இங்கிருந்து வந்தவன். மக்கள் இங்கு கிரிக்கெட் மட்டுமல்ல, பிற விளையாட்டுகளையும் விரும்புகிறார்கள். இங்கு கால்பந்து அணியாக இருந்தாலும், கபடி அணியாக இருந்தாலும், அனைத்து விளையாட்டு அணிகளையும் மக்கள் ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர்.
ஆர்சிபி ஒரு மிகவும் பிரபலமான அணி. எனவே இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காயமடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும் என்று ராகுல் டிராவிட் கூறினார்.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஏ.ஷங்கர் மற்றும் பொருளாளர் ஈ.எஸ்.ஜெய்ராம் ஆகியோர் தார்மீக பொறுப்பை ஏற்று தங்கள் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்தனர். இதற்கிடையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகி நிகில் சோசலே, ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் பாரம்பரியமிக்க பெங்களூர் சின்னசாமி மைதானத்தை கர்நாடக அரசு அகற்றப்போவதாக வெளியான செய்தி பில கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சி அடைய செய்துன்ளளது.
சின்னசாமி மைதானத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், இது தவறான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளனர். போக்குவரத்து நெரிசலை, இதற்கு காரணம் காட்டுவது தவறு என்று குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், சென்னை, கொல்கத்தா, மும்பையிலும் கிரிக்கெட் மைதானங்கள் நகரத்தின் முக்கிய இடத்தில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications