Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் இந்திய அணியில் டிராவிட்.. பேட்டிங் ஆலோசகராக நியமனம்!

டெல்லி: முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணத்துக்கான பேட்டிங் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

தலைமை பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு உதவியாக அவர் இருப்பார்.

இங்கிலாந்து பயணங்களில் வெற்றிகரமான ஒரே இந்திய வீரராக இன்றளவும் டிராவிட் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2011ல் ஜொலித்த ஒரே நட்சத்திரம்

2011ல் ஜொலித்த ஒரே நட்சத்திரம்

2011ம் ஆண்டு டோணி தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் சிறப்பாக ஆடிய ஒரே வீரர் டிராவிட் மட்டுமே என்பது நினைவிருக்கலாம்.

அத்தனை டெஸ்ட்டிலும் முட்டை

அத்தனை டெஸ்ட்டிலும் முட்டை

அந்தப் பயணத்தின்போது விளையாடிய அத்தனை டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றது. ஆனாலும் டிராவிட் மட்டுமே சிறப்பாக ஆடியிருந்தார்.

இளம் வீரர்களுக்கு உதவும்

இளம் வீரர்களுக்கு உதவும்

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் மென்டாராக இருக்கும் டிராவிட் வருகை, இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு இங்கிலாந்து பயணத்தின்போது பேருதவியாக இருக்கும்.

5 டெஸ்ட்

5 டெஸ்ட்

ஜூலை 9ம் தேதி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன.

பிளட்சரே கேட்டார்

பிளட்சரே கேட்டார்

இந்திய அணி நிர்வாகம்தான் டிராவிடின் சேவையைக் கோரியதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய அணி சார்பில் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர்தான் வாரியத்தை அணுகியதாக கூறப்படுகிறது.

2012ல் ஓய்வு பெற்ற டிராவிட்

2012ல் ஓய்வு பெற்ற டிராவிட்

ராகுல் டிராவிட் 2012ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் அவர் 13,288 ரன்களைக் குவித்துள்ளார். 36 சதம் போட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளிலும் ராகுல் 10,889 ரன்களையும், 12 சதங்களையும் போட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் 461 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து தொடரில் 461 ரன்கள் குவிப்பு

2011 இங்கிலாந்து தொடரின்போது டெஸ்ட் போட்டிகளில் 461 ரன்களைக் குவித்திருந்தார் டிராவிட்.

பிளட்சருக்குக் குறி வைக்கும் கவாஸ்கர்

பிளட்சருக்குக் குறி வைக்கும் கவாஸ்கர்

சமீப காலமாகவே பிளட்சரைத் தூக்கி விட்டு டிராவிடை பயிற்சியாளராக்க வேண்டும் என்று பிசிசிஐயின் இடைக்காலத் தலைவரான கவாஸ்கர் கூறி வந்தது நினைவிருக்கலாம். எனவே டிராவிடின் வருகை, பிளட்சரின் நீக்கத்துக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

2015 வரை பிளட்சர்தான்

2015 வரை பிளட்சர்தான்

தற்போதைய பயிற்சியாளரான பிளட்சரின் பதவிக்காலம் 2015 உலகக் கோப்பைப் போட்டிகள் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 30, 2014, 8:40 [IST]
Other articles published on Jun 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+