
இலங்கை தொடர்
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. இந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் செயல்படவுள்ளனர். ரவி சாஸ்திரி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

பயோ பபுள்
இந்த தொடருக்காக இந்தியாவில் 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்த இந்திய வீரர்கள் இலங்கை சென்ற பின் 4 நாட்கள் குவாரண்டைனில் இருந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு தற்போது முதற்கட்ட பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சி அளித்து வருகிறார். இலங்கை தொடரில் பங்குபெற்றுள்ள பெரும்பாலான இளம் வீரர்கள் ராகுல் டிராவிட்டிடம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ
இந்நிலையில் முதற்கட்ட பயிற்சி குறித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. திறந்தவெளி மைதானம் ஒன்றில் வீரர்கள் வார்ம் அப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மைதானம் மற்றும் நீச்சல் குளத்தில் கைப்பந்து விளையாட்டுகளை விளையாடி குஷியாக தோன்றுகின்றனர்.

டிராவிட் விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், வீரர்கள் 17-18 நாட்கள் குவாரண்டைனில் இருந்துள்ளனர். தற்போது பயிற்சி தொடங்கியிருப்பது, வீரர்களுக்கு சிறப்பான விஷயமாக உள்ளது. ஹோட்டலில் சிறிய காலி பூங்கா ஒன்று உள்ளது. அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இது மிகவும் சிறப்பாகவே உள்ளது எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications