For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அவர் கதவையே உடைக்கிறார்” .. சீனியர் வீரரை பார்த்து வியந்த டிராவிட்.. உலகக்கோப்பை வாய்ப்பு உறுதி!

மும்பை: டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியின் கதவுகளை ஒரு வீரர் மிக வேகமாக ஓங்கி அடிப்பதாக டிராவிட் கூறியுள்ளார்.

Recommended Video

Rahul Dravid-க்கு வந்த சோதனை! India அணிக்கு மிகப்பெரிய சவால் | *Cricket

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக தயாராகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு இன்னும் அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆசியக்கோப்பை என 4 தொடர்கள் மட்டுமே உள்ளன. ஏனென்றால் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள்ளாக இறுதி செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசியிடம் ஒப்படைக்க வேண்டும்.

டிராவிட் வியப்பு

டிராவிட் வியப்பு

இந்நிலையில் ஒரு வீரர் நிச்சயம் இடம் பெறுவார் போன்று தெரிகிறது என ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அதில், தினேஷ் கார்த்திக் ஒரு குறிப்பிட்ட பணிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் இணைந்து காட்டிய ஆட்டம், கடைசி 5 ஓவர்களில் 73 ரன்களை குவித்தது.

ஓங்கி அடிக்கிறார்

ஓங்கி அடிக்கிறார்

தினேஷ் கார்த்திக்கின் கம்பேக், எங்களின் பணியை சுலபமாக்கியுள்ளது. நான் எப்போதுமே வீரர்களிடம், டி20 உலகக்கோப்பை அணிக்கான கதவுகளை தட்டாதீர்கள், ஓங்கி அடித்து உடைத்துவிடுங்கள் எனக்கூறுவேன். அந்தவகையில் தினேஷ் கார்த்திக் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து வருகிறார் என டிராவிட் கூறியுள்ளார்.

தரமான அரைசதம்

தரமான அரைசதம்

தென்னாப்பிரிக்க தொடரில் தினேஷ் கார்த்திக் 4 போட்டிகளில் விளையாடி 92 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 158.6 ஆகும். ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் அடித்தது தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Story first published: Monday, June 20, 2022, 18:29 [IST]
Other articles published on Jun 20, 2022
English summary
Rahul dravid on Dinesh karthik ( தினேஷ் கார்த்திக்கின் டி20 உலகக்கோப்பை வாய்ப்பு ) டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் வாய்ப்பு குறித்து டிராவிட் பேசியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+