
தென்னாப்பிரிக்க போட்டி
இந்திய அணி தனது 3வது போட்டியாக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 30ம் தேதியன்று பெர்த் நகரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன மாற்றங்கள்
பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறது. குறிப்பாக பேட்டிங்கில் குயிண்டன் டிகாக், டேவிட் மில்லர் மற்றும் பவுலிங்கில் ஆன்ரிக் நார்ட்ஜே, ரபாடா ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்து வருகின்றனர். எனவே இதனை சமாளிக்க இந்திய அணி அனைத்து தவறுகளையும் சரிசெய்துக்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ராகுலின் பிரச்சினை
அந்தவகையில் இந்திய அணியில் சரி செய்ய வேண்டிய முக்கிய பிரச்சினையாக கே.எல்.ராகுல் தான் இருக்கிறார். பயிற்சி போட்டிகளில் கலக்கிய ராகுல், லீக் சுற்றின் 2 போட்டிகளிலுமே சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினார். அவர் பந்தை எதிர்கொள்வதற்கே தயங்கியது ரசிகர்களுக்கு வெளிப்படையாக தெரிந்தது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றன.

பேடி அப்டன்
இந்நிலையில் அவருக்கு வலைப்பயிற்சியை நிறுத்திவிட்டு மனநில மேம்பாட்டை கொடுக்கவிருக்கிறார் ராகுல் டிராவிட். விராட் கோலி கடும் மன அழுத்தத்தில் இருந்தபோது, அவரின் கம்பேக்கிற்கு உதவியது பேடி அப்டன் தான். எனவே அடுத்த 2 நாட்களுக்கு பேடி அப்டனிடம் 2 மணி நேரம் மன நல மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications