Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஸ்பின்னர்களுடன் ப்ளேயிங் 11.. முதல் டெஸ்ட் போட்டி.. ராகுல் டிராவிட் எடுத்துள்ள முடிவு.. என்ன காரணம்?

நாக்பூர்: ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்க இந்திய அணி முடிவெடுத்துள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இதற்காக மெகா திட்டத்தையும் போட்டிருக்கிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை முதல் நாக்பூரில் தொடங்கவுள்ளது. இதற்கான கடைசி கட்ட பயிற்சிகளில் இரு அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 அல்லது 3 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறே முடியும். இதனால் சீனியர் வீரர்களுக்கு அதிக பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிரடியான முடிவு

அதிரடியான முடிவு

இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 வித்தியாசமான முடிவை கையில் எடுத்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அதாவது இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் 4 சுழற்பந்துவீச்சாளர்களை களமிறங்க திட்டமிட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களில் ஒரே ஒருவரை கொண்டு வருவதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி இல்லையென்றால் ஒரு பேட்ஸ்மேனை குறைத்துவிட்டு, 2வது வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வர வேண்டும்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

நாக்பூர் மைதானத்தின் பிட்ச்-ல் 3 நாட்களுக்கு முன்பு வரை ஓரளவிற்கு புற்கள் தெரிந்தன. இதனால் முதல் 2 நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் உதவியாக இருக்கும் வகையில் இருந்தது. 3வது நாளில் இருந்து தான் ஸ்பின்னர்கள் தாக்கம் ஏற்படுத்துவார்கள். ஆனால் கடைசி நேரத்தில் புற்கள் அனைத்தையும் முற்றிலுமாக நீக்குமாறு ராகுல் டிராவிட் கோரினார். இதனால் முதல் நாளில் இருந்தே ஸ்பின்னர்களுக்கு மட்டுமே பிட்ச் கட்டுப்படும்.

ஸ்பின்னர்களின் படை

ஸ்பின்னர்களின் படை

இப்படிப்பட்ட களத்தில் ஸ்பின்னர்களை கொண்ட படையை தான் நம்பியாக வேண்டும். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி யாராலும் தவிர்க்க முடியாதவர்கள். இந்த ஜோடி இந்தியாவில் மட்டும் 484 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். இந்த இருவரை சமாளிக்கவே ஆஸ்திரேலியா போராட வேண்டும். ஆனால் இவர்களுடன் குல்தீப் யாதவும் கொண்டு வரப்படுகிறார்.

மேலும் 2 வீரர்கள்

மேலும் 2 வீரர்கள்

குல்தீப் யாதவின் ஃபார்ம் தற்போது யாராலும் நிறுத்த முடியாத அளவிற்கு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வங்கதேச தொடரில் கம்பேக் தந்த அவர் முதல் டெஸ்டிலேயே 8 விக்கெட்களை சாய்த்தார். அதன்பின்னர் இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் அசத்தியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் அக்‌ஷர் பட்டேலையும் அணிக்குள் கொண்டு வரவிருக்கின்றனர்.

Story first published: Wednesday, February 8, 2023, 10:00 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+