Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ரித்வி ஷா தவிர.. மத்தவங்க கண்ணுக்கு தெரியலையா? - "மும்பை" கெத்துக்கு டிராவிட் "நெத்தியடி" பதில்

மும்பை: இலங்கை செல்லும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நெத்தியடி பதில் ஒன்றை பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி ஜூலை 13, 16, 18 ஆகிய தேதிகளிலும், 20 ஓவர் போட்டி 21, 23, 25 ஆகிய தேதிகளிலும் கொழும்பில் நடக்கிறது.

அந்த சமயத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதால், இலங்கை தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்ளும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

'நச்' பதில்

'நச்' பதில்

இத்தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை கிளம்புவதற்கு முன்பு கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், கோச் டிராவிட் செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு 'நச்' பதில்களை கொடுத்தார்.

பாடம் கற்கலாம்

பாடம் கற்கலாம்

இந்திய ஏ அணிக்கு பயிற்சி அளிப்பது குறித்து பேசிய டிராவிட், "இது சற்று வித்தியாசமானது. நீங்கள் வளர்ச்சி மட்டத்தில் இருக்கும்போது, இலக்கு இதிலிருந்து வேறுபடும். எங்களிடம் ஒரு நல்ல அணி உள்ளது, 20 வீரர்கள் உள்ளனர். இந்த குறுகிய தொடரில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. தொடரை வெல்வதற்கான சிறந்த அணி எதுவோ, அதை நாங்கள் தேர்வு செய்வோம். சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, ஷிகர் போன்ற மூத்தவர்களிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்றார்.

தேவதத் படிக்கல்

தேவதத் படிக்கல்

பிறகு, மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷாவுக்கு இந்த சுற்றுப்பயணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுக்கு சுளீரென பதில் அளித்த டிராவிட், "பிரித்வியை தாண்டி வேறு நிறைய வீரர்களுக்கும் இது முக்கியமான தொடர் தான் என்று, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார் டிராவிட் ... தேவதத் படிக்கல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் போன்ற போன்ற வீரர்கள் இத்தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அதீத ஆர்வத்தோடு இருப்பார்கள். அவர்கள் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார்களா என்று தேர்வாளர்களைத் தான் கேட்க வேண்டும். இந்த மட்டத்தில் நீங்கள் சிறப்பாகச் விளையாட முடிந்தால், தேர்வாளர்கள் நிச்சயமாக கவனிப்பார்கள். சர்வதேச கிரிக்கெட்டின் பிரஷரில் நீங்கள் சிறப்பாக விளையாடினால், தேர்வாளர்கள் நிச்சயமாக கவனத்தில் கொள்வார்கள்" என்றார்.

மும்பை வீரர்கள்

மும்பை வீரர்கள்

பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் மும்பை வீரர்கள் என்றாலே ஒரு தனி முக்கியத்துவம் இருப்பது விளையாட்டை விளையாட்டாய் அணுகாமல் சீரியஸாக அணுகுபவர்களுக்கு தெரியும். மும்பை வீரர் என்றால் கொஞ்சம் கூடுதல் கவனிப்பு என்பதே இதன் பொருள். எனினும், ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி, கங்குலி போன்றோரெல்லாம் மும்பைக்கு வெளியே இருந்துதான் வந்து சாதித்துள்ளார்கள். அப்படி, சச்சினால் இளம் வயதிலேயே தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் ப்ரித்வி ஷா. மும்பை சிறுவன். அதன் அடிப்படையில், இலங்கை செல்லும் அணியின் 20 வீரர்கள் இருக்கும் நிலையில், ப்ரித்வி ஷாவுக்கு இத்தொடர் முக்கியத்துவமா இருக்குமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, ப்ரித்விக்கு மட்டுமல்ல நிறைய வீரர்களுக்கும் தான் என பொட்டில் அடித்தாற்போல் பதில் அளித்திருக்கிறார் டிராவிட்.

Story first published: Sunday, June 27, 2021, 21:24 [IST]
Other articles published on Jun 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+