For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நாங்கள் ஒன்றும் அப்படியில்லை”.. ஆசிய கோப்பையில் மோசமான தோல்வி.. ராகுல் டிராவிட் சரியான பதிலடி!

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்த போதும், முடிவு எதிர்பார்த்தது போன்று கிடைக்கவில்லை.

வெளியேறிய இந்தியா

வெளியேறிய இந்தியா

தொடரின் லீக் சுற்றில் தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்தியது. ஆனால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. ஆஃப்கானுடன் மற்றும் வெற்றி கண்டது. இதனால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது.

டிராவிட்டின் விளக்கம்

டிராவிட்டின் விளக்கம்

இந்நிலையில் இந்தியாவின் சொதப்பல் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாங்கள் சூப்பர் 4 போட்டிகளை வென்றிருக்கலாம் என்ற பேச்சுக்கள் உள்ளன. ஆனால் அதனை நாம் பார்க்கும் விதத்தை மாற்ற வேண்டும். டி20 கிரிக்கெட்டில் அனைத்துமே குறைவாக தான் இருக்கும். எனவே அனைத்தும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். அந்த 2 போட்டிகளிலும் ரன்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை. இதனை புரிந்துக்கொள்ளுங்கள்.

மோசமான அணி?

மோசமான அணி?

ஆட்டத்தை கடைசி பந்து வரை நாங்கள் கொண்டு சென்றோம். இதனை கூறி நான் சாக்கு கூற விரும்பவில்லை. நானும், அந்த இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வென்றிருக்கலாமோ என்று சிந்தித்துக்கொண்டே தான் இருக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டுள்ளோம். 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் இந்தியா மோசமான அணி என கூறிவிட முடியாது. கடந்த 8- 9 மாதங்களாக நல்ல கிரிக்கெட்டை ஆடியுள்ளோம்.

சூழல் அப்படி இல்லை

சூழல் அப்படி இல்லை

ஒருசில காயங்கள், உடல் நல பாதிப்புகள், ஒரு அணியின் சமநிலையை கெடுக்கின்றன. இதுபோன்ற தொடர்களில் அந்த சமநிலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அது இந்திய அணியில் தவறியது. எனவே இதற்காக மிகவும் வருத்தப்பட்டு கொண்டிருக்க கூடாது. அணியில் அதுபோன்ற சூழல்களையும் நாங்கள் உருவாக்குவதில்லை எனக்கூறியுள்ளார்.

Story first published: Friday, September 9, 2022, 16:52 [IST]
Other articles published on Sep 9, 2022
English summary
Rahul dravid explanation about asia cup 2022 ( ஆசிய கோப்பை 2022 ) ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+