Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வெட்கத்த பார்.. வெட்கத்த பார்” டிராவிட்-க்கு ஐசிசி பிறந்தநாள் சர்ஃபரைஸ்.. குஷியில் மலர்ந்த முகம்!

கொல்கத்தா: இலங்கை அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் திடீரென தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து சுவாரஸ்ய விஷயம் தோன்றியதும் அவரின் முகம் வெட்கத்தில் மலர்ந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பேட்டிங்கிற்கு சாதகமான களத்தில் அதிக ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 215 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

2வது ஒருநாள் ஆட்டம்

2வது ஒருநாள் ஆட்டம்

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியோ, இலங்கைக்கு ஒருபடி மேல் சென்று அதிர்ச்சி தந்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (17) மற்றும் சுப்மன் கில் (21) ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதன்பின் வந்த கோலி 4 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் 28 ரன்களுக்கும் அவுட்டாக இந்தியா 86 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் கே.எல்.ராகுல் (64) - ஹர்திக் பாண்ட்யா ஜோடி (36) இந்தியாவை காப்பாற்றினர்.

டிராவிட்டின் ரியாக்‌ஷன்

டிராவிட்டின் ரியாக்‌ஷன்

இந்நிலையில் இந்த பரபரப்பான போட்டிக்கு மத்தியிலும் ராகுல் டிராவிட் செய்த விஷயம் கவனம் பெற்றுள்ளது. இன்று இந்திய அணி பயிற்சியாளரான டிராவிட்டின் 50வது பிறந்தநாள் ஆகும். எனவே அவரை கவுரவிக்கும் வகையில் சாதனைகள் மற்றும் ரன் விவரங்களை மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பினர்.

நம்ம டிராவிட்டா இது

நம்ம டிராவிட்டா இது

திடீரென தனது ரெக்கார்ட்-கள் மற்றும் புகழாரங்களை பார்த்த டிராவிட் வெட்கத்தில் சிரித்தபடியே சில நிமிடங்களுக்கு இருந்தார். திரையில் இருந்து அவரின் கண்கள் விலகவே இல்லை. சிறு குழந்தை எப்படி வெட்கப்படுமோ, அதனை போல கையில் ஒரு பந்தை தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டே சிரித்துக்கொண்டிருந்தார். டிராவிட்டை இப்படி யாருமே பார்த்ததில்லையே என ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

புள்ளி விவரங்கள்

புள்ளி விவரங்கள்

50 வயதாகும் டிராவிட் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்களை குவித்துள்ளார். இதில் 12 சதமும் 83 அரைசதமும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவானான இவர் 164 போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களை குவித்திருக்கிறார். 36 சதம், 5 இரட்டை சதம், 63 அரைசதங்கள் ஆகும். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒரே ஒரு போட்டியில் ஆடி 31 ரன்களை அடித்துள்ளார்.

Story first published: Friday, January 13, 2023, 6:00 [IST]
Other articles published on Jan 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+