Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் போட்டிகளில் இருந்து டெண்டுல்கர், டிராவிட் விடைபெற்றனர்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான டெண்டுல்கரும் ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளனர்.

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ராகுல் டிராவிட்டோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே அறிவித்துவிட்டார். இருவரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடி வந்தனர். இதுவே தங்களது கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி என்று இருவருமே அறிவித்திருந்தனர்.

சாம்பியன்ஸ் லீக் பைனல்

சாம்பியன்ஸ் லீக் பைனல்

டெல்லியில் நேற்று சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

சச்சின் டெண்டுல்கர்..

சச்சின் டெண்டுல்கர்..

நேற்றைய போட்டியுடன் இந்திய அணியின் நம்பிக்கை நட்சித்திரமும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார். அவர் ஏற்கெனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் ஓய்வு

20 ஓவர் கிரிக்கெட்டில் ஓய்வு

நேற்று நடந்த இறுதிப்போட்டியுடன் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற்றார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியும், கரவொலி எழுப்பியும் பிரியா விடை கொடுத்தனர்.

மும்பை வீரர்கள் அணிவகுத்து மரியாதை

மும்பை வீரர்கள் அணிவகுத்து மரியாதை

அத்துடன் மும்பை வீரர்களும் இருபக்கமும் அணிவகுத்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர்.

70 ரன்கள்..

70 ரன்கள்..

40 வயதான டெண்டுல்கர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் மொத்தம் 70 ரன்கள்கள் எடுத்தார்.

டிராவிட் ஓய்வு

டிராவிட் ஓய்வு

இதே போல் மற்றொரு ஜாம்பவானாகிய 40 வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கும் தமக்கு இதுவே கடைசி 20 ஓவர் தொடர் என்று கூறியிருந்தார். அவரும் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

48 ரன்கள்..

48 ரன்கள்..

அவர் இந்த தொடரில் 48 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மரியாதை

மரியாதை

டிராவிட் வெளியேறிய போதும் அவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மரியாதை தெரிவித்து விடை கொடுத்தனர்.

Story first published: Monday, October 7, 2013, 11:18 [IST]
Other articles published on Oct 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+