ஒரே தீர்வு.. இவரை பயிற்சியாளராக போடுங்கள்.. இந்திய அணியை அசைக்க கூட முடியாது.. வலுக்கும் கோரிக்கைகள்
சிட்னி: இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய அணி சிறப்பாக ஆட போகிறது. கடந்த வருடம் போல இந்த வருடமும் இந்த அணி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யும் என்று கருதப்பட்டது.
முக்கியமாக கேப்டன் கோலியின் ஆட்டம் இந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியில் கேப்டன் கோலி தொடங்கி எல்லா வீரர்களும் மிகவும் மோசமாக சொதப்பி உள்ளனர்.

டெஸ்ட்
டி 20 தொடரில் இந்திய அணி கஷ்டப்பட்டு வெற்றிபெற்றாலும் ஒருநாள் தொடரில் மோசமாக ஆடி தொடரை இழந்தது. இன்னொரு பக்கம் தற்போது டெஸ்ட் தொடரிலும் மோசமாக ஆடி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மோசமான அணுகுமுறையேகாரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

மோசம்
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சரியாக பயிற்சி கொடுக்கவில்லை. அணியின் வளர்ச்சியின் மீது அவர் கவனம் செலுத்துவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏ அணியை அவர் சிறந்த அணியாக மாற்றினார். அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய ஏ வெற்றிபெறுவதற்கும் இவரே முக்கிய காரணமாக இருந்தார்.

வழிகாட்டுதல்
வீரர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கண்டுபிடித்து அவர்களை ராகுல் டிராவிட் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இதனால் அவர்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டும். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்தால்தான் இந்திய அணி புதிய பலம் பெறும். வீரர்கள் கட்டுக்கோப்புடன் இருப்பார்கள்.

கட்டுக்கோப்பு
ராகுல் டிராவிட்விற்கு உடனே பயிற்சியாளர் பொறுப்பை வழங்க வேண்டும். ரவி சாஸ்திரியை உடனே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளாராக நியமிக்க வேண்டும் என்று முன்பே கோரிக்கைகள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications