Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் மகன் கர்நாடக அணியின் கேப்டனாக நியமனம்.. இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டவருக்கும் இடம்

பெங்களூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் சங்கங்களும் அறிவித்திருக்கிறது. அதன்படி இந்திய அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட கருண் நாயர் மீண்டும் ரஞ்சி கோப்பையில் விளையாட திரும்பியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இரண்டு சீசன்களாக அவர் விதர்பா அணிக்கு விளையாடி வந்த நிலையில் தற்போது மீண்டும் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு விதர்பா அணி ரஞ்சி கோப்பையை வெல்ல கருண் நாயர் முக்கிய காரணமாக இருந்தார்.

Rahul dravid

தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி அதிக ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் இதன் மூலம் இந்திய அணியும் அவருக்கு இடம் கிடைத்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் கர்நாடகா ரஞ்சி அணிக்கு திரும்பி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அனுபவ வீரரான மாயங் அகர்வால் கர்நாடகா அணியின் கேப்டனாக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபோன்று மோஷின் கான், ஷிகர் செட்டி, கிருதிக் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக கிரிக்கெட் அணியின் ரஞ்சி டிராபி தொடக்கப் போட்டிக்கான அணி:மயங்க் அகர்வால் (கேப்டன்), கருண் நாயர், ஆர். ஸ்மரன், கே.எல். ஸ்ரீஜித் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் கோபால், வைஷாக் விஜயகுமார், விட்வத் கவிரப்பா, அபிலாஷ் ஷெட்டி, எம். வெங்கடேஷ், நிகின் ஜோஸ், அபினவ் மனோகர், க்ருதிக் கிருஷ்ணா (விக்கெட் கீப்பர்), கே.வி. அனீஷ், மொஹ்சின் கான், ஷிகர் ஷெட்டி.

இதேபோன்று 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாடு தழுவிய அளவில் வினோ மான்கட் கோப்பை என்ற பெயரில் நடத்தப்படும். இது அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை டெஹ்ராடூனில் நடத்தப்படுகிறது. இதில் ராகுல் டிராவிட்டின் 17 வயது மகனான ஆன்வே டிராவிட் கர்நாடகா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தொடரில் கடந்த சீசனில் கர்நாடகா அணிக்காக அவர் அதிக ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, October 6, 2025, 21:42 [IST]
Other articles published on Oct 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+