For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராவிட் மகனுக்கு ஏற்பட்ட கதி.. U19 அணியில் தேர்வானாலும், உலககோப்பையில் விளையாட முடியாது!

பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் மகனான சமித் டிராவிட் அண்மையில் இந்திய அண்டர் 19 அணியில் சேர்க்கப்பட்டார். இருந்தபோதிலும் சமித் டிராவிட்டால் அண்டர் 19 உலக கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் பெருஞ்சுவர் என்று ரசிகர்கள் டிராவிட்டை அழைப்பார்கள்.

டிராவிட் டெஸ்ட், ஒரு நாள் என இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்திய அணியில் கேப்டன் ஆகவும் ராகுல் டிராவிட் செயல்பட்டு இருக்கிறார் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட், அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து 2018 ஆம் ஆண்டு உலக கோப்பையை பெற்று தந்தார்.

cricket rahul dravid samit dravid

இதனை தொடர்ந்து இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் 2024 டி20 உலக கோப்பையை வெல்ல உதவினார். இந்த நிலையில் ராகுல் டிராவிட் மகன் சமீத் டிராவிட் தற்போது இந்திய அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கூச் பெஹார் கோப்பை என்ற தொடரில் கர்நாடக அணிக்காக எட்டு போட்டியில் விளையாடிய ராகுல் டிராவிட் பேட்டிங்கில் 362 ரன்கள் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் மகாராஜா t20 தொடரில் மைசூர் அணியின் வீரராக களம் இறங்கிய ராகுல் டிராவிட் மகன் சமித் 7 இன்னிங்ஸில் 82 ரன்கள் சேர்த்திருக்கிறார். எனினும் அவருடைய பந்துவீச்சு பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. இந்த சூழலில் தான் இந்திய அண்டர் 19 அணியில் ராகுல் டிராவிட் மகன் சமித் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் பாண்டிச்சேரியில் செப்டம்பர் 21,23,26 ஆம் தேதி ஒரு நாள் போட்டியும், செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7ஆம் தேதி 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டி சென்னையிலும் நடைபெறுகிறது.

ராகுல் டிராவிட் மகன் சமித், இதில் ஒரு முக்கிய வீரராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். டிராவிட்டின் மகன் சமித் நவம்பர் 10 2005 ஆம் தேதி பிறந்தார். இந்த நிலையில் அவர் இன்னும் இரண்டு மாதத்தில் தன்னுடைய 19 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக தான் அவரால் 2026 அண்டர் 19-ல் உலகக் கோப்பையில் விளையாட முடியாது. அப்போது ராகுல் டிராவிட்டின் மகனுக்கு 21 வயது ஆகிவிடும் என்பதால் அவர் சேர்க்கப்பட மாட்டார்.

எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 தொடரும் டிராவிட் மகன் தன்னுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமையை நிரூபித்து சீனியர் அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராவிட்டில் தன்னுடைய இளம் வயதில் நியூசிலாந்துக்கு எதிரான அண்டர் 19 தொடரில் ஒரு வீரராக சேர்க்கப்பட்டார். எனினும் அதன் பிறகு டிராவிட் 19 வயதை தாண்டி விட்டதால் அவரால் அண்டர் 19 உலக கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது தன்னுடைய மகனுக்கும் அதே போல் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 1, 2024, 16:16 [IST]
Other articles published on Sep 1, 2024
English summary
Rahul dravid son samit Dravid wont be able to play in u19 world cup டிராவிட் மகனுக்கு ஏற்பட்ட கதி.. U19 அணியில் தேர்வானாலும், உலககோப்பையில் விளையாட முடியாது!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+