For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடியோ- ஓ மை காட்! டிராவிட்டின் ஜெராக்ஸ் போல் விளையாடும், அவருடைய மகன்

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக விளங்கி இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்தவர் ராகுல் டிராவிட். தற்போது டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விளங்குகிறார்.

டிராவிட் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போதெல்லாம் நமது ரசிகர்கள் நம் தோல்வியே அடைய மாட்டோம் என்ற தைரியத்தில் இருப்பார்கள். ஏனென்றால் தோல்வியை நோக்கி போட்டி சென்றாலும் டிராவிட் மட்டையை போட்டு டிரா செய்து கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கும்.

Rahul dravid son samit playing shots like his dad in coach behar trophy

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரை போல் அவருடைய மகன் தற்போது கிரிக்கெட்டில் கால் பதித்து இருக்கிறார். அதே மாதிரி டிராவிட்டின் மகனும் தற்போது தந்தையின் பாதையில் கிரிக்கெட்டை கையில் எடுத்து விளையாடுகிறார். புலி எட்டடி பாய்ந்தால் அதன் குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்களே. அதே போல் டிராவிட்டின் மகன் அவரை மிஞ்சுவது போல் தற்போது பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.

Rahul dravid son samit playing shots like his dad in coach behar trophy

19 வயது உட்பட்டவர்களுக்கான கோச் பெஹார் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடகா அணிக்காக டிராவிட்டின் மகன் சமித் விளையாடி வருகிறார். 18 வயதான சமித் காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 98 ரன்கள் சேர்த்தார். இதில் அவர் டிராவிட் போல் ஆடிய ஷாட்டுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கவர் ட்ரைவ் டிபன்ஷிப் ஷாட் போன்ற அனைத்தையும் கச்சிதமாக டிராவிட்டையே மிஞ்சும் அளவுக்கு அவ்வளவு அழகாக ஆடி ரசிகர்களை சமித் கவர்ந்திருக்கிறார். இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இவர் தந்தையை மிஞ்சும் அளவுக்கு கிரிக்கெட்டில் ஜொலிப்பார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டிராவிட் போல் அல்லாமல் சமித் பந்துவீச்சிலும் கலக்கி வருகிறார். காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் காஷ்மீர் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணி வீழ்த்தியது. டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் போதே அவர் மகன் இந்திய அணிக்கு விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Story first published: Thursday, December 21, 2023, 14:39 [IST]
Other articles published on Dec 21, 2023
English summary
Rahul dravid son samit playing shots like his dad in coach behar trophy வீடியோ- ஓ மை காட்! டிராவிட்டின் ஜெராக்ஸ் போல் விளையாடும், அவருடைய மகன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+