Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் மீண்டும் ரிஸ்க்.. இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்..ராகுல் டிராவிட் எடுத்த பிடிவாத முடிவு

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11-ல் பிட்ச்-ன் சூழலையும் மீறி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரிஸ்க் எடுக்க துணிந்துள்ளார். இதனால் எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்ட சூழலில் இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் காலை 9 மணிக்கு இந்த போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்திய களத்தில் எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி 3வது டெஸ்டிலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முணைப்புடன் களமிறங்கவுள்ளது. இதே போல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கும் முன்னேறும். மற்றொருபுறம் எப்படியவாது பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர்கள் வெறியுடன் களமிறங்குகின்றனர். இதற்காக 10 நாட்கள் தீவிர பயிற்சியை பெற்றுவிட்டு வருகின்றனர்.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

இந்நிலையில் இந்த முக்கிய போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ராகுல் டிராவிட் ரிஸ்க் எடுக்கிறார். போட்டி நடைபெறும் ஹோல்கர் மைதானத்தில் சிகப்பு மண் நிறைந்துள்ளது. இதனால் முந்தைய போட்டிகளை போல இல்லாமல் வேகப்பந்துவீச்சுக்கும் இந்த களம் பொறுத்தமாக இருக்கும்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

முதல் 2 நாட்களுக்கு அதிக வேகமும், பவுன்ஸும் இருக்கும் எனவும், 3வது நாளில் இருந்து தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. எனவே இங்கு ஒருவேளை ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தால் அவர்களை சமாளிக்க இந்திய அணியில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக தேவைப்படுவார்கள். அப்போதுதான் வேரியேஷன்களை காட்ட முடியும்.

டிராவிட் எடுத்த ரிஸ்க்

டிராவிட் எடுத்த ரிஸ்க்

ஆனால் ரோகித் சர்மாவும், ராகுல் டிராவிட்டும் பவுலிங்கில் மாற்றத்தை கொண்டு வர விரும்பவில்லை. தொடர்ந்து அக்‌ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் காம்போவை பயன்படுத்தவே விரும்புகிறார். இந்திய களம் குறித்து ஸ்பின்னர்கள் நன்கு அறிவார்கள் என்பதால் தங்களது பலத்தை மட்டும் நம்பி செல்லலாம் என முடிவெடுத்துள்ளனர்.

Story first published: Tuesday, February 28, 2023, 23:35 [IST]
Other articles published on Feb 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+