Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து தூதரக அதிகாரிக்கு.. தனது ஸ்டைலில்.. "பாடம்" எடுத்த ராகுல் டிராவிட் - வீடியோ

பெங்களூரு: நம்ம ராகுல் டிராவிட் இப்போ ஏக பிஸியில் இருக்கிறார். கோச், அட்வைஸர், என்று மனிதர் ஃபுல்டைம் பிஸி தான்.

குறிப்பாக, இலங்கை சென்ற இந்திய 'ஏ' அணிக்கு கோச்சாக நியமிக்கப்பட்டதில் இருந்து மீண்டும் லைம்லைட்டில் அதிகம் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணியை வைத்துக் கொண்டு டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை வென்றுவிட்டார்.

சிறப்பான பங்களிப்பு

சிறப்பான பங்களிப்பு

இலங்கை தொடரில் வீரர்களை விட, கேப்டனை விட மிக மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர் கோச் ராகுல் டிராவிட் தான். இந்திய அணியின் சுவர்.. இப்போது வரைக்கும். இன்னமும், இவரது இடத்தை டெஸ்ட் போட்டியில் இந்தியா சரிவர ரீபிளேஸ் செய்யவில்லை என்று உறுதியாகக் கூறலாம். புஜாரா இவரது இடத்தை நிரப்ப வந்தவர் என்று சொன்னாலும், அவரால் டிராவிட் அளவுக்கு கன்சிஸ்டன்சி கொடுக்க முடியவில்லை. ஆனால், டிராவிட் அந்த நிலைத்தன்மையை எப்போதும் மெயின்டெய்ன் செய்பவராக இருந்தவர். இப்போதும் இருக்கிறார்.. எப்படி என்கிறீர்களா? ஒரு கோச்சாக.. ஒரு அல்ல பயிற்சியாளராக இன்னமும் தனது சிறப்பான பங்களிப்பை இந்தியாவுக்கு வழங்கி வருகிறார்.

ஆலோசகர்

ஆலோசகர்

மெயின் கோச் ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருப்பதால், இலங்கை தொடருக்கு டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்தே டிராவிட் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. பேட்டிங்கில் பொறுமையான நிதானத்தை கடைப்பிடித்த டிராவிட், பயிற்சியாளராக அப்படி இருக்கவில்லை. அக்ரெஸிவ் மோடில் தான் இயங்குகிறார். அதன் காரணமாகவே, அண்டர்-19 உலகக் கோப்பை இந்தியா வசமானது. தவிர, வீரர்களை அவர் உருவாக்கும் விதமும், ஊக்குவிக்கும் விதமும் அவர் இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளராக, ஆலோசகராக நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

டிராவிட் கண்டுபிடிப்புகள்

டிராவிட் கண்டுபிடிப்புகள்

இன்று இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்திருக்கும் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, இஷான் கிஷன், ஷுப்மன் கில், கமலேஷ் நாகர்கோட்டி உள்ளிட்ட பல வீரர்கள் டிராவிட்டின் கண்டுபிடிப்புகளே. இன்று அவர்கள் அணியில் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்பதே டிராவிட்டின் தேர்வு திறமைக்கான சான்று. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திர சிங் தோனிக்கு மாற்றாக இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் மூலம் அட்டகாசமான விக்கெட் கீப்பரை கண்டறிந்து கொடுத்திருப்பதே டிராவிட் தான்.

Recommended Video

Mohammed Siraj Bowling அசத்தலா இருக்கு.. பாராட்டும் முன்னாள் Pakistan வீரர்
இங்கிலாந்து தூதரக அதிகாரி

இங்கிலாந்து தூதரக அதிகாரி

இப்படி அவரைப் பற்றி பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. விரைவில் ரவி சாஸ்திரியின் ஒப்பந்த காலம் முடிவடைவதால், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராகக் கூட வாய்ப்பிருக்கிறது. (ஆனால் அதற்கு விராட் கோலி மனது வைக்க வேண்டும் என்பது வேறு விஷயம்). இந்நிலையில், இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் தூதரக அதிகாரி வெளியிட்ட வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் தூதரக அதிகாரி அலெக்ஸ் எல்லிஸ் தனது ட்விட்டரில் தான் டிராவிட்டிடம் கன்னட மொழி உச்சரிக்க கற்றுக் கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 'Indian cricket expression' நிகழ்வு என்ற குறிப்பிட்டு அவர் டிராவிட்டிடம் கன்னடம் பேச கற்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Story first published: Monday, August 9, 2021, 12:03 [IST]
Other articles published on Aug 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+