Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னயா பிட்ச் இது? நாக்பூரில் கடுப்பான ராகுல் டிராவிட்..3 நாட்களுக்குள் மாற்றிட பரிந்துரை- என்ன ஆனது

நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான நாக்பூர் மைதானத்தின் பிட்ச்-ஐ பார்த்தவுடன் ராகுல் டிராவிட் அதிருப்தியடைந்துள்ளார். மாற்ற வேண்டும் என கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் வியாழக்கிழமை முதல் ( பிப்.9) தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 2ம் தேதியன்றே நாக்பூர் மைதானத்திற்கு சென்றடைந்த இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் இன்று போட்டி நடைபெறும் விதர்பா மைதானத்திற்கு சென்று பிட்ச்-ஐ பார்த்துள்ளனர்.

டிராவிட் கோபம்

டிராவிட் கோபம்

இந்நிலையில் போட்டி நடைபெறும் பிட்ச்-ஐ பார்த்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தியடைந்துள்ளார். நாக்பூர் பிட்ச்-ல் சற்று புற்கள் இருக்கும். வழக்கமாக இந்த மைதானத்தில் ஆட்டத்தின் முதல் 2 நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், பின்னர் 3வது நாளில் இருந்து ஸ்பின்னர்களின் ஆதிக்கம் தொடங்கும். இதுதான் டிராவிட்டிற்கு பிடிக்கவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

போட்டியை நடத்தும் அணிக்கு ஏற்ற வகையில் பிட்ச்-ஐ மாற்றிக்கொள்ளலாம். அந்தவகையில் இந்திய அணி கடந்த காலங்களில் முழுவதும் ஸ்பின்னருக்கு ஏற்ற மைதானங்களில் தான் ஆடியுள்ளன. எனவே இந்த முறையும் பிட்ச்-ல் உள்ள புற்களை சுத்தம் செய்துவிட்டு, முழுவதுமாக ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உருவாக்க பிட்ச் குரேட்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

3 நாட்களே அவகாசம்

3 நாட்களே அவகாசம்

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. கடைசி நேரத்தில் பிட்ச்-ன் தன்மையை மாற்றினால் அது என்ன முடிவை வேண்டுமானாலும் கொடுக்கலாம். நியூசிலாந்து டி20 தொடரின் போதும் கூட லக்னோ பிட்ச்-ஐ கடைசி நேரத்தில் மாற்றியதால் தான் தவறுகள் நடந்தன எனக்கூறப்பட்டது. இதற்காக ஒரு அதிகாரியும் நீக்கப்பட்டார். இதனையெல்லாம் தெரிந்தும் தான் டிராவிட் பிட்ச்-ஐ மாற்றக்கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் புகார்

ஆஸ்திரேலியாவின் புகார்

இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவின் பிட்ச் குற்றச்சாட்டுக்கள் நீண்டுக்கொண்டே செல்கின்றனர். அதாவது இந்தியாவில் மிக மோசமாக ஸ்பின்னர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். பயிற்சியின் போது ஒரு டிராக்கை கொடுத்துவிட்டு, நிஜ போட்டியில் வேறு டிராக்கை கொடுக்கின்றனர். அதனையெல்லாம் தகர்த்து இந்தியா இந்த முறை வெற்றி காணும் என கூறுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 7, 2023, 18:52 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+