Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வாத்தி ரெய்ட்..!! அதிர்ச்சியில் சீனியர் வீரர்கள்..

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரி இருந்த காலத்தில் விராட் கோலி நினைப்பது தான் நடக்கும்.

Recommended Video

Ravi Shastri-க்கும் Dravid-க்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.. Gambhir சொன்ன தகவல்

மேலும் பயிற்சியாளர் என பெயருக்கு தான் ரவி சாஸ்த்ரி இருந்ததாகவும், அவரால் அணி வீரர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியின் நடவடிக்கையில் பல மாறறங்களை செய்துள்ளார்.

நியூசிலாந்த தொடர்

நியூசிலாந்த தொடர்

டி-20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இருந்து இந்திய அணி, வெளியேறிய நிலையில், தற்போது நியூசிலாந்து தொடரை இந்திய அணி முழுமையாக வென்றது. இதனால் மன சோர்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் வெற்றியை விடிய விடிய சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்திருந்தனர்.

டிராவிட் தடை

டிராவிட் தடை

இந்த பார்ட்டி முடிவு டிராவிட்டின் காதுக்கு செல்ல, வெறும் 3 நாட்களில் டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு தயாராக நேரமே இல்லை. தற்போது பார்ட்டி செய்யாமல் ஓய்வு எடுங்கள். அப்போது தான் கான்பூர் சென்று டெஸ்ட் போட்டிக்கு நாம் தயாராக முடியும் என்று டிராவிட் அதிரடியாக கூறியுள்ளார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதனை சற்றும் எதிர்பாராத இந்திய அணி வீரர்கள் சாஸ்த்ரி காலத்தில் ஜாலியாக இருந்தோமே. இவர் இப்படி செய்கிறாரே என ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து வீரர்கள் டிராவிட்டிடம் மீண்டும் பார்ட்டிக்கு அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு டிராவிட் டெஸ்ட் தொடரில் விளையாட கூடிய வீரர்களை தவிர மற்ற வீரர்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுங்கள் என கருணை காட்டியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சீனியர் வீரர்கள் விடிய விடிய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாத்தி ரெய்ட்

வாத்தி ரெய்ட்

இதற்கு முன், நீங்கள் எப்படி இருந்தீர்கள் என தெரியாது. ஆனால் இப்போது நீங்கள் இந்திய அணிக்காக விளையாடுகிறீர்கள். நாட்டுக்காக சில தியாகங்களை செய்ய தான் வேண்டும் . பயற்சி நேரத்தில் பயிற்சி, ஜாலியாக இருக்கும் நேரத்தில் ஜாலியாக இருங்கள். மற்ற படி உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு, நீங்கள் நினைப்பதை இப்போது போல் எப்போதும் சொல்ல வேண்டும் என இந்திய அணி வீரர்களுக்கு டிராவிட் ரெய்டு விட்டுள்ளார்.

Story first published: Tuesday, November 23, 2021, 20:21 [IST]
Other articles published on Nov 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+