Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட், விராட் கோலியின் செயலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!! அதீத கவனம் பெறும் வீடியோ..!

ஜோகன்ஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணியில் விரிசல், வீரர்களுக்கும் , நிர்வாகத்திற்கும் மோதல் என கடந்த 2 வாரமாக சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்தது.

Recommended Video

Rohit Sharma addresses India U-19 team at NCA preparatory camp| Oneindia Tamil

நல்லா இருந்த டீம் இப்படி ஆயிடுச்சே என ரசிகர்கள் புலம்பினர். அவ்வளவு ஏன்? விராட் கோலிக்கும், பயிற்சியாளர் டிராவிட்டுக்கும் இடையே சிக்கல் உள்ளதாக கூட செய்திகள் வெளியாகின.

இதனால் என்ன நடக்கப்போகுதோ என்ற கலக்கத்தில் ரசிகர்கள் இருந்தனர். காரணம் நடந்த சம்பவங்கள் அப்படி.

‘சிக்கல்

‘சிக்கல்

பொதுவாக ரவி சாஸ்த்ரி பயிற்சியாளராக இருந்த போது விராட் கோலியுடன் நட்புடனே இருந்து வந்தார். ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கு முன்பும் விராட் கோலியும், ரவி சாஸ்த்ரியும் இணைந்து தான் செய்தியாளர்களை சந்திப்பார்கள்.ஆனால் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி தனியாகவே இருந்தார்.

விளையாட்டு

விளையாட்டு

இதனால் பயிற்சியாளர் டிராவிட்டுக்கும், கோலிக்கும் இடையே பிரச்சினை இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், பி.சி.சி.ஐ. வெளியிட்ட வீடியோவில் ராகுல் டிராவிட் தலைமையிலான ஒரு அணியும், விராட் கோலி தலைமையிலான மற்றொரு அணியும் இணைந்து கிக் பால் போட்டி விளையாடினர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதில், ராகுல் டிராவிட் இளம் வீரர்களுக்கு ஈடாக விளையாடி அசத்தினார்,அப்போது விராட் கோலியும், டிராவிட்டும் கட்டி அணைத்து தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர். இதனை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்திய அணியில் நாம் நினைத்தது போல் விரிசல் இல்லை என இந்த வீடியோ உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி

பயிற்சி

தற்போது பயோ பபுளில் உள்ளதால், இது போன்று சிறிய பயிற்சியை இந்திய வீரர்கள் தொடங்கினர். இந்த விளையாட்டு மூலம் விரர்களுக்கு இடையே உள்ள மன கசப்பும், மன அழுத்தமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நாளை முதல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது.

Story first published: Saturday, December 18, 2021, 22:44 [IST]
Other articles published on Dec 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+