Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான்.. ராகுல் டிராவிட் படைத்த 26 ஆண்டு கால ரெக்கார்டு காலி

ராவல்பிண்டி: கிரிக்கெட் உலகில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் படைத்திருந்த நீண்ட காலச் சாதனையை பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன் சல்மான் அலி ஆகா முறியடித்துள்ளார். ஒரே ஆண்டில் அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய உலகச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ராவல்பிண்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியின் மூலம் சல்மான் அலி ஆகா இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். 1999-ம் ஆண்டு இந்திய அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட், ஒரே ஆண்டில் 53 சர்வதேசப் போட்டிகளில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) விளையாடி உலக சாதனை படைத்திருந்தார். இந்தச் சாதனை சுமார் 26 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது.

Rahul Dravid s 26-Year-Old Record Shattered by Pakistan Captain Salman Ali Agha with Most International Matches in a Year

அதேபோல, பாகிஸ்தானின் முகமது யூசுப் (2000-ம் ஆண்டு) மற்றும் இந்தியாவின் தோனி (2007-ம் ஆண்டு) ஆகியோரும் தலா 53 போட்டிகளில் விளையாடி டிராவிட்டின் சாதனையைச் சமன் செய்திருந்தனர். ஆனால் யாராலும் அதை முறியடிக்க முடியவில்லை.

தற்போது 2025-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வரும் சல்மான் அலி ஆகா, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் மூலம் இந்த ஆண்டில் தனது 54-வது சர்வதேசப் போட்டியில் களமிறங்கினார். இதன் மூலம் டிராவிட், தோனி, யூசுப் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

2025-ம் ஆண்டில் சல்மான் அலி ஆகா விளையாடிய போட்டிகளின் விவரம்: டெஸ்ட் போட்டிகள் - 5, ஒருநாள் போட்டிகள் - 17, டி20 போட்டிகள் - 32, மொத்தம் - 54 போட்டிகள்.

இந்த ஆண்டில் இதுவரை 1492 ரன்களையும், 11 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை பாகிஸ்தானை அழைத்துச் சென்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஜிம்பாப்வேக்கு எதிரான இந்த முத்தரப்பு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 195 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் (74 ரன்கள்) மற்றும் சாஹிப்சாதா பர்ஹான் (63 ரன்கள்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சல்மான் அலி ஆகா கடைசி நேரத்தில் களமிறங்கி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் மற்றொரு சிறப்பம்சமாக, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை அவர் கைப்பற்றினார். சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை தாரிக் பெற்றார்.

Story first published: Monday, November 24, 2025, 11:55 [IST]
Other articles published on Nov 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+