For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜென்டில்மேன் யார்? பண்டியா, ராகுலை பெயர் சொல்லாமல் கலாய்த்த மும்பை காவல்துறை!!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மும்பை காவல்துறை அவர்களது விவகாரத்தை கிண்டல் செய்து ட்வீட் வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ட்வீட் அமைந்து இருப்பது இதன் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டியுள்ளது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

காபி வித் கரன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பண்டியா பேசிய கருத்துக்கள், அவர் பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்ப்பது போன்று இருந்தது. இது இணையத்தில் அவர் மீது கடும் விமர்சனத்தை கிளப்பியது.

ராகுலுக்கும் சிக்கல்

ராகுலுக்கும் சிக்கல்

அவருடன் இருந்த ராகுல் பெரியளவில் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசவில்லை என்றாலும் சர்வதேச போட்டிக்கு முன் தான் இரவு முழுவதும் பார்ட்டியில் பங்கேற்றதை குறித்து கூறி இருந்தார். பண்டியா விவகாரம் பெரிதானதை அடுத்து, ராகுலும் அந்த பிரச்சனையில் சிக்கினார்.

இடை நீக்கம்

இடை நீக்கம்

இருவர் மீதும் பிசிசிஐ விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. விசாரணை முடியும் வரை இருவரையும் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது பிசிசிஐ. இதில் பண்டியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது விளம்பர ஒப்பந்தங்கள் பல முடிவுக்கு வந்துள்ளது.

அணியில் இடம் கிடைக்குமா?

அணியில் இடம் கிடைக்குமா?

இணையத்திலும் பண்டியா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதால், இப்போதைக்கு அவரை தேசிய அணியில் சேர்க்காமல் இருக்கவே பிசிசிஐ விரும்பும் என தெரிகிறது. ராகுல் ஏற்கனவே பார்ம் அவுட் ஆன வீரர் என்பதால், இந்த சிக்கலுக்கு பின் அவர் அணியில் இடம் பிடிக்க பல மாதங்கள் ஆகலாம். இப்படி கடுமையாக இருவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை காவல்துறை தன் பங்குக்கு பெயர் குறிப்பிடாமல் இருவரையும் குத்திக் காட்டி ட்வீட் போட்டுள்ளது.

மும்பை காவல்துறை கிண்டல்

மும்பை காவல்துறை போட்ட ட்வீட்டில், "ஒரு ஜென்டில்மேன் எப்போதும், எங்கேயும் ஜென்டில்மேன் தான்" என குறிப்பிட்டு ஒரு புகைப்பட மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மீம்-இல், "எப்படி ஒரு சிறந்த வீரர் ஆவது? களத்தில் : அதிக ஸ்கோர், களத்துக்கு வெளியே : பெண்களுக்கு அதிக மரியாதை" என குறிப்பிட்டுள்ளது.

பெண்களுக்கு மரியாதை

பெண்களுக்கு மரியாதை

இந்த பதிவில் நேரடியாக ராகுல், பண்டியா பெயர்கள் குறிப்பிடவில்லை என்றாலும், "ஜென்டில்மேன்" என குறிப்பிட்டு கிரிக்கெட் விளையாட்டையும், பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனக் கூறி பண்டியாவையும் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Wednesday, January 16, 2019, 17:43 [IST]
Other articles published on Jan 16, 2019
English summary
Rahul and Hardik Pandya controversy trolled by Mumbai Police
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X