Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல நடிகரின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் இந்திய இளம் வீரர்... சமூக வலைதளங்களில் வைரல் படம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன், இந்திய துவக்க வீரர் ராகுல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் களத்தில் இருக்கும் போதும், இல்லாத போதும் சரி... சர்ச்சைகளில் சிக்குவது ரொம்ப சாதாரணம். அந்த வகையில், ஹர்திக் பாண்டியா, ராகுல் ஆகிய வீரர்கள் பெண்களுடன் கிசுகிசு வெளியாகும் செய்திகள் வெளியாகின.

Rahul relationship with bollywood star athiya shetty, sources said

அதிலும், சில காலமாக, நடிகை நிதி அகர்வாலுடன் சேர்த்து பேசப்பட்ட ராகுல், தற்போது, நடிகை அதியா ஷெட்டியுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. அவர் தமிழில் 12 பி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அவரது மகள் அதியா ஷெட்டி. இந்தி படங்களில் நடித்து வரும் அவர், கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் உலா வருகின்றன.

இதுபற்றி பாலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது: பொதுவான நண்பர் மூலம் ராகுலும் அதியாவும் சந்தித்தனர். முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம் பின் காதலானது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து காதலித்து வருகின்றனர்.

ராகுல் மற்றும் அதியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்களின் தோழி ஆகன்ஷா ரஞ்சன் கபூர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் இருவரும் இதுபற்றி எவ்வித கருத்து தெரிவிக்கவில்லை. முன்னதாக, நடிகை நிதி அகர்வாலுடன் கிசுகிசுக்கப்பட்டார் ராகுல். பின்னர் அதை மறுத்து, நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று தெரிவித்திருந்தார்.

Story first published: Friday, June 28, 2019, 21:15 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+