Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் கையெழுத்திட்ட ஜெர்சி... வானத்தில் பறந்த ராகுல் டிவாட்டியா

அபுதாபி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்பின்னிங் ஆல்-ரவுண்டர் ராகுல் டிவாட்டியா பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்ஸ்களை அடித்து பிரபலமாகியுள்ளார்.

கடந்த ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்துள்ளது.

ஆயினும் அந்த போட்டியில் விராட்டின் கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றதன்மூலம் ராகுல் டிவாட்டியா மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

Rahul Tewatia receives autographed jersey from Virat Kohli

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்பின்னிங் ஆல்-ரவுண்டர் ராகுல் டிவாட்டியா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜாவில் நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி ஒரே இரவில் பிரபலமாகி விட்டார். அந்த அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அவர் அடித்த 5 அதிரடி சிக்ஸ்களால் ராயல்ஸ் அணி மிகப்பெரிய இலக்கான 224 ரன்களை அடித்து மிக அதிக ரன் சேஸை அடித்த அணி என்ற சாதனையை இந்த சீசனில் படைத்துள்ளது.

ஆயினும் நேற்று நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோல்வியை அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் ராகுல் டிவாட்டியா, மகிழ்ச்சியடைவதற்கு காரணம் இருந்தது. அது ஆர்சிபி கேப்டன் விராட் கோலியின் கையெழுத்திட்ட ஜெர்சி அவருக்கு கிடைத்ததுதான். இந்த தருணத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ஐபிஎல்.

Story first published: Sunday, October 4, 2020, 23:23 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+