Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவருக்கா 6 வருஷம் வாய்ப்பு தரல.. அயர்லாந்து தொடரில் ராகுல் திரிபாதி எண்ட்ரி.. உணர்ச்சிப்பூர்வ பதில்

மும்பை: 6 வருடமாக யாராலும் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த ராகுல் திரிபாதிக்கு மெகா வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அயர்லாந்து சுற்றுப்பயணம்

அயர்லாந்து சுற்றுப்பயணம்

ஒரு அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக செல்லவுள்ள சூழலில் மற்றொரு அணி அயர்லாந்துக்கு செல்கிறது. அங்கு வரும் ஜூன் 26 மற்றும் ஜூன் 28ம் தேதிகளில் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணி

இந்திய அணி

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியில் தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெற்ற பல வீரர்களும் வாய்ப்பு பெற்றுள்ளனர். காயத்தில் இருந்த சூர்யகுமார் யாதவும் கம்பேக் கொடுக்கவுள்ளார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத சர்ஃப்ரைஸாக ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

6 ஆண்டு காத்திருப்பு

6 ஆண்டு காத்திருப்பு

31 வயதாகும் ராகுல் திரிபாதி, கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதும், இந்திய தேர்வுக்குழுவின் கண்களில் படவில்லை. அவருக்கு பின் வந்த இளம் வீரர்கள் ஒரே ஆண்டில் தேர்வாகி இந்திய அணிக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் தான் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 சிறப்பான ரெக்கார்ட்

சிறப்பான ரெக்கார்ட்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ராகுல் திரிபாதி 413 ரன்களை விளாசினார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 158.24 ஆகும். இதுவரை மொத்தமாக 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1798 ரன்களை விளாசியுள்ளார். இதில் 10 அரைசதங்கள் அடங்கும். இப்படிபட்ட அனுபவமிக்க வீரரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க பெரும் முயற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

திரிபாதி பேச்சு

திரிபாதி பேச்சு

இந்த வாய்ப்பு குறித்து பேசியுள்ள ராகுல் திரிபாதி, எனது கனவு நினவாகியுள்ளது. தேர்வுக்குழு மற்றும் ரசிகர்கள் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் எப்போதெல்லாம் கடின உழைப்பை போடுகிறேனோ, அப்போதெல்லாம் நல்ல பலன் கிடைக்கிறது. எனக்கு ப்ளேயிங் 11ல் ஆடும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 16, 2022, 10:32 [IST]
Other articles published on Jun 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+