Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போராடினால் கனவுகள் சாத்தியமாகும்.. 31 வயதில் சாதித்த ராகுல் திரிபாதி.. சச்சின், டிராவிட்க்கு பிறகு இடம்

புனே : இந்திய டி20 கிரிக்கெட் அணியில் தனது 31 வது வயதில் ராகுல் திரிபாதி முதல் முறையாக அறிமுகமாகி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் விளையாடி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் ராகுல் திரிபாதி.

தனது 27 வது வயதில் புனே அணிக்காக ஐபிஎல் இல் முதல் முறையாக களம் இறங்கினார்.
அந்த தொடரில் 14 போட்டியில் விளையாடிய ராகுல் திரிபாதி விளாசி அசத்தினார்.

இதில் அதிகபட்சமாக 93 ரன்கள் ராகுல் திரிபாதி எடுத்தார். இதனால் இந்திய அணியின் தொடக்க இடத்திற்கு ஒரு நல்ல வீரர் கிடைத்துவிட்டார் என ரசிகர்கள் நம்பினர்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆனால் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு என்பதை தேர்வு குழுவினர் கொடுக்கவே இல்லை. எனினும் விடாமல் கடுமையாக முயற்சித்த ராகுல் திரிபாதி 2021 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசன் போட்டியில் 397 ரன்களும், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 413 ரன்களும் என அடுத்தடுத்து அசத்தினார். இதன் மூலம் ராகுல் திரிபாதி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

விடாமுயற்சி

விடாமுயற்சி

எனினும் ராகுல் திரிபாதி தன்னுடைய விடாமுயற்சியை கைவிடவே இல்லை. இன்று இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நடு வரிசையில் களமிறங்குவதற்காக ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 வயது 309 நாட்களில் இந்திய அணியில் விளையாடுவதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமாகும் மூன்றாவது வயதான நபர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

 3வது வயதான நபர்

3வது வயதான நபர்

சச்சின், ராகுல் டிராவிட்டுக்கு பிறகு இத்தகைய சாதனையை ராகுல் திரிபாதி பெறுகிறார். தொடர்ந்து ஒரு விஷயத்திற்காக நாம் கடினமாக உழைத்தால் நிச்சயம் அது நிகழும் என்பதற்கு இந்த புத்தாண்டில் ராகுல் திரிபாதி ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார். இந்த வாய்ப்பே ராகுல் திரிபாதி பயன்படுத்திக்கொண்டு டி20 அணியில் முக்கிய வீரராக இடம்பெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டி வரை வந்தது. அப்போது கே கே ஆர் அணியில் விளையாடிய சுப்மான் கில் சிவம் மவி ராகுல் திருப்பாதி ஆகிய மூன்று வீரர்களும் தற்போது இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் ராகுல் திரிபாதி ஓரிரு ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள். அவர் பிளேயிங் லெவனில் எங்கு வேண்டுமானாலும் விளையாடுவார் என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 5, 2023, 19:52 [IST]
Other articles published on Jan 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+