Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இளம் வீரருக்கு அடித்த லக்.. ஜிம்பாப்வே தொடரில் கிடைக்கும் பெரும் வாய்ப்பு.. இந்தியாவின் பலம் கூடியது

ஹராரே: நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருந்த இந்திய இளம் வீரர் ஒருவருக்கு ஜிம்பாப்வே தொடரில் லக் அடித்துள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் 28, 20 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, பண்ட், விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்காக ஓய்வில் உள்ளதால் கே.எல்.ராகுல் தலைமையில் இளம் படை களமிறங்கியுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு வந்துள்ள கே.எல்.ராகுல் 3 போட்டிகளிலும் விளையாடவுள்ளார். இதே போல சீனியர்கள் இல்லாததால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

திரிபாதி அறிமுகம்

திரிபாதி அறிமுகம்

அந்தவகையில் இளம் வீரர் ராகுல் திரிபாதி ஒருவழியாக இந்த தொடரில் அறிமுகமாகலாம். ஐபிஎல் தொடரில் நீண்ட வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் திரிபாதி இன்னும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அயர்லாந்து தொடரில் திடீரென சேர்க்கப்பட்ட போதும், அவர் ப்ளேயிங் 11-ல் இடம்பெற முடியாமல் போனது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

எனவே இந்த தொடரில் திரிபாதி அறிமுகம் ஆவது உறுதியாகியுள்ளது. ஓப்பனிங்கிற்கு கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் உள்ளனர். முதல் விக்கெட்டிற்கு ராகுல் திரிபாதி விளையாடுவார். 2வது விக்கெட்டிற்கு இஷான் கிஷான் அல்லது சஞ்சு சாம்சன் இருவரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பெரும் அதிர்ஷ்டம்

பெரும் அதிர்ஷ்டம்

31 வயதாகும் ராகுல் திரிபாதி இதுவரை ஐபிஎல் தொடரில் 74 இன்னிங்ஸ்களில் 1,798 ரன்களை குவித்துள்ளார். இதில் 10 அரைசதங்களும் அடங்கும். திரிபாதியின் ஸ்ட்ரைக் ரேட் 140.8 என சிறப்பாக உள்ளது. இதில் சிறப்பாக விளையாடினால், இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, August 16, 2022, 14:20 [IST]
Other articles published on Aug 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+