Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னோட வாய்ப்பு வரும்... பட்டைய கிளப்பலாம்னு காத்திருந்தேன்... திரிபாதி உற்சாகம்

அபுதாபி : சிஎஸ்கேவிற்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்சின் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 51 பந்துகளில் 81 ரன்களை அடித்து அதகளம் செய்திருந்தார் ராகுல் திரிபாதி.

இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நேற்றைய போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் திரிபாதி.

இந்நிலையில் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசியதற்கு திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேகேஆர் வெற்றி

கேகேஆர் வெற்றி

சிஎஸ்கேவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தனக்கான சரியான வாய்ப்பிற்காக காத்திருந்த திரிபாதி, இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். 51 பந்துகளில் 81 ரன்களை குவித்தார்.

காத்திருந்த திரிபாதி

காத்திருந்த திரிபாதி

இந்நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் அந்த தருணங்களை தான் என்ஜாய் செய்ததாகவும் சரியாக வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்ததாகவும் திரிபாதி நேற்றைய வெற்றிக்கு பிறகு ஐபிஎல்டி20.காம்மிற்காக வருண் சக்ரவர்த்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

துவக்க வீரராக களமிறங்கிய திரிபாதி

துவக்க வீரராக களமிறங்கிய திரிபாதி

தான் சிறப்பாக விளையாடியதாகவும் ஆனால் பௌலர்கள் மிடில் ஆர்டரில் போட்ட பௌலிங்காலேயே தன்னுடைய பேட்டிங் மற்றும் ரன்களுக்கு அர்த்தம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல், உற்சாகத்துடன் சுப்மன் கில்லுடன் தான் துவக்க வீரராக களமிறங்கி விளையாடியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மாறிய போட்டி

மாறிய போட்டி

சிஎஸ்கேவிற்கு எதிராக 12வது ஓவரை போட்ட கேகேஆர் பௌலர் சுனில் நரேன் சிஎஸ்கேவின் முக்கிய விக்கெட்டான ஷேன் வாட்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். இதேபால வருண் சக்கரவர்த்தியும் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவரை சிஎஸ்கேவின் வெற்றியே கணிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டி மொத்தமாக மாறியது.

Story first published: Thursday, October 8, 2020, 20:36 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+