Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடும் மழை: இந்தியா- ஆஸி. முதல் ஒரு நாள் போட்டி ரத்து!

kochi stadium
கொச்சி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று கொச்சியில் நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கொச்சியில் மழை பெய்து வருவதால், ஜவகர்லால் நேரு மைதானத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இன்று காலை தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. இருப்பினும் இன்று காலையிலும் மழை பெய்தது. இதனால் போட்டியை திட்டமிட்டப்படி தொடங்க முடியவில்லை. இந்நிலையில் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

இதனால், போட்டியைக் காண ஆவலுடன் வந்த 30000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இவர்கள் அனைவருக்கும் டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இரண்டாவது ஒரு நாள் போட்டி அக்டோபர் 20-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+