4 மணி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது.. தவிடுபொடியான ஆஸி.யின் பிளான்.. இந்தியா பக்கம் வீசும் காற்று!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை பெய்த காரணத்தால் பிட்ச் இந்திய அணியின் பவுலிங்கிற்கு சாதகமாக மாறியுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வென்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் உமேஷ் யாதவ், மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு சைனி, ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.

எப்படி
இந்த நிலையில் இன்று போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் மழை பெய்தது. இந்திய அணி 7 ஓவர்களே போட்டு இருந்த நிலையில் மழை பெய்து ஆட்டம் தடைபட்டது. முதல் 7 ஓவர்களிலேயே இந்திய அணி முதல் விக்கெட்டை எடுத்து இருந்த நிலையில் 4 மணி நேர மழைக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

மழை
மழை காரணமாக பிட்ச் லேசாக ஈரமாகி இருந்தது. இதன் காரணமாக பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக மாறியது. சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால்தான் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

எதிர்பார்க்கவில்லை
ஆனால் எதிர்பாராமல் மழை பெய்து, ஆஸ்திரேலிய அணியின் பிளானை காலி செய்தது. மழைக்கு பின் பிட்ச் மொத்தமாக பவுலிங் செய்ய சாதகமாக மாறியது. எதிர்பார்த்ததை விட பிட்ச் அதிகமாக ஸ்விங் ஆகியது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

அவுட்
முதலில் பேட்டிங் இறங்கி அதிக ரன்கள் எடுக்கலாம் என்று ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால் மழை அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மாறியது. இதன் காரணமாக மழைக்கு பின் களமிறங்கிய ஆஸி. பேட்ஸ்மேன்கள் முடிந்த அளவு அடித்து ஆட முயன்றனர்.

ரன்கள் எடுத்தனர்
விக்கெட் விழ வாய்ப்பு உள்ளது. அதனால் முடிந்த அளவு ரன் எடுப்போம் என்ற எண்ணத்தில் ஆஸி பேட்ஸ்மேன்கள் ஆட தொடங்கி உள்ளனர். அதிக ரிஸ்க் எடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வேகமாக சிங்கிள் எடுத்து ஆடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications