Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாக்கிங் நியூஸ்..!! மான்செஸ்டரில் மழை வரும் என தகவல்.. இந்தியா,நியூசி போட்டி ரத்தாக வாய்ப்பு?

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ | இந்திய அணியின் அரையிறுதி போட்டிக்கு இப்படி ஒரு சிக்கலா?- வீடியோ

மான்செஸ்டர்: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. 5 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

மான்செஸ்டர் மைதானத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை குறுக்கிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மைதானத்தில் நடப்பு தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது.

தூறல் மழை

தூறல் மழை

போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் லேசான சாரலும், வானம் மேக மூட்டமாகவும் இருக்கும் என்று இங்கிலாந்து வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தாமதமாக வாய்ப்பு?

தாமதமாக வாய்ப்பு?

மழைக்கு வாய்ப்பு இருப்பதால், ஆட்டம் தாமதமாக தொடங்கவும் சாதகமான சூழல் காணப்படுகிறது. ஆனால், மதியம் வானம் தெளிவாகக் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மழை 2.30 மணியளவில் இருக்கும் என்றும், மீண்டும் 6 அல்லது 7 மணிக்கு மழை வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நாளை மீண்டும் போட்டி

நாளை மீண்டும் போட்டி

அதனால், சில மணி நேரம் ஆட்டம் தடைபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, மழையின் குறுக்கீட்டால் போட்டி பாதிக்கப்பட்டாலோ அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ போட்டி நாளை நடக்கும்.

ரத்தானால் என்ன நடக்கும்?

ரத்தானால் என்ன நடக்கும்?

அதற்காக ரிசர்வ் டே ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. நாளையும் மழை பெய்தால் ஆட்டம் ரத்து செய்யப்ட்டு யார் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

பைனலில் இந்தியா?

பைனலில் இந்தியா?

தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 4 புள்ளிகள் கூடுதல் பெற்றுள்ளதால் இந்திய அணி தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதே நடைமுறை தான் ஆஸ்திரேலியா,இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டியிலும் கடைபிடிக்கப்படும்.

Story first published: Tuesday, July 9, 2019, 12:11 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+