பெங்களூரில் கொட்டும் கன மழை.. இந்தியா-ஆஸி. போட்டிக்கு காத்திருக்கு தடை?
பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை தொடர்ந்தது. இதேபோன்ற காலநிலை நாளையும் தொடர்ந்தால் இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பெங்களூருவில் நாளை நடைபெறவிருக்கும் 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய, ஆஸ்திரேலிய வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெங்களூரில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இரு தினங்கள் முன்பும் நள்ளிரவு தொடங்கிய மழை காலை வரை நீடித்தது.
நாளைய ஆட்டம் பகலிரவாக நடைபெறுவதால் இரவில் மழை தொடங்கினால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியா ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது.
Story first published: Wednesday, September 27, 2017, 11:50 [IST]
Other articles published on Sep 27, 2017


Click it and Unblock the Notifications